வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

இயக்கம், தயாரிப்பைத் தாண்டி புது அவதாரம் எடுக்கும் லோகேஷ்.. போட்டி போட்டு லாக் செய்த 2 பிரபலங்கள்

Director Lokesh Kanagaraj: லோகேஷ் கனகராஜ் இயக்கிய படங்கள் எல்லாம் தொடர் வெற்றி பெற்றது. இப்போது விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கியுள்ளார். வரும் அக்டோபர் 19ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளில் இந்த படம் ரிலீஸ் ஆகிறது. இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் லோகேஷ் அவதாரம் எடுத்திருக்கிறார்.

முதல் இரண்டு படங்களை தனது உதவி இயக்குனர்களை வைத்து தயாரிக்க திட்டமிட்டுள்ளார். இது மட்டுமல்ல பாலிவுட்டிலும் ஒரு படத்தை தயாரிக்க முடிவெடுத்துள்ளார். இப்படி இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் திரை உலகில் ரவுண்டு கட்டும் லோகேஷ், இப்போது ஹீரோவாகவும் அவதாரம் எடுக்கிறார்.

இவர் ஒரு ஹீரோ மெட்டீரியல் தான். அவர் கேமராவை எதிர்கொள்ளும் விதத்தையும், ஸ்கிரீன் பிரசன்ஸ், டயலாக் டெலிவரி எல்லாம் அல்டிமேட் ஆக இருக்கும். இவற்றை உன்னிப்பாக கவனித்த இரண்டு பிரபலங்கள் அவரை வைத்து படம் பண்ண வேண்டும் என உறுதியுடன் இருக்கின்றனர். இது ரொம்ப நல்ல விஷயமாச்சே! என இந்த தகவலை அறிந்த ரசிகர்களும் குதூகலத்தில் இருக்கின்றனர்.

ஏனென்றால் இயக்குனராக இருக்கும் போதே தரமான சம்பவத்தை செய்த லோகேஷ், நிச்சயம் நடிகர் ஆகிவிட்டால் நடிப்பில் பொளந்து கட்டி விடுவார். தமிழ் சினிமாவில் டாப் இயக்குனர்களாக இருக்கும் மணிரத்தினம் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் இருவரும் லோகேஷ் வைத்து ஒரு கதையை உருவாக்கி வருகிறார்கள்.

விரைவில் இவர்கள் இருவரும் லோகேஷை அணுகி ஓகே வாங்கி விடுவார்கள். இதற்கான அறிவிப்பும் அடுத்தடுத்து வெளியாகும். முதலில் லோகேஷ்-க்கு மனதில் நடிப்பதற்கான ஆர்வம் இல்லாவிட்டாலும் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அதையும் செய்து பார்த்து விட வேண்டியது தான் என்ற மனநிலையில் இருக்கிறார்.

இவரைப் போட்டி போட்டுக் கொண்டு மணிரத்தினமும் கௌதம் வாசுதேவ் மேனனும் லாக் செய்கின்றனர். லோகேஷ் லியோவுக்கே டஃப் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. விரைவில் திரையில் லோகேஷை ஒரு ஹீரோவாக பார்க்க போகிறோம்.

Trending News