சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

பணப்பெட்டியை தூக்கிட்டு போக போகும் 2 போட்டியாளர்கள்.. அப்படின்னா இவர் வின்னர் ஆகப் போவதில்லையா?

Bigg Boss Tamil 8: பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது வெற்றிகரமாக 70 நாட்களை கடந்த நிலையில் இன்னும் ஒரு மாதம் தான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் யார் என்றால் தீபக், முத்துக்குமரன், விஷால், அருண், ஜெஃப்ரி, ரயான், ராணவ், சௌந்தர்யா, ரஞ்சித், அன்சிகா, ஜாக்லின், பவித்ரா, மஞ்சரி ஆகிய 13 போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.

இன்றைக்கு ஆரம்பித்த டாஸ்க் மிகவும் பரபரப்பாகவும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் விளையாடி வருகிறார்கள். அந்த வகையில் அதிகமான கற்களை சேகரித்தது அன்சிதா, பவித்ரா, ஜெஃப்ரி டீம் தான். இரண்டாவது இடத்தில் ஜாக்லின், ரஞ்சித், ரயான் இருக்கிறார்கள். மூன்றாவதாக முத்துக்குமார், தீபக், மஞ்சரி 54 கற்களை வைத்திருக்கிறார்கள். இதில் விஷால், அருண் மற்றும் சௌந்தர்யா கம்மியான கற்களை பெற்ற நிலையில் இந்த போட்டியை தொடர்ந்து விளையாட முடியாது.

மேலும் இந்த விளையாட்டு தொடர்ந்து இந்த வாரங்களில் நடைபெறும் என்று பிக் பாஸ் அறிவித்திருக்கிறார். இதில் நேற்று விளையாடும் பொழுது ராணவ் கையில் அடிபட்டதால் அவர் ஒதுங்கும்படி ஆகிவிட்டது. இந்நிலையில் வழக்கம் போல் ஒவ்வொரு பிக் பாஸ் சீசனிலும் பணப்பெட்டி டாஸ்க் வரும். ஏனென்றால் பைனலுக்கு மூன்று பேர் தான் போக முடியும்.

அதிலே முதலிடம் பிடித்தவர்களுக்கு மட்டுமே 50 லட்சம் ரூபாய் பரிசு தொகை மீதம் இருக்கும் இரண்டு போட்டியாளர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும். இதனால் மற்ற போட்டியாளர்களுக்கு மிகப்பெரிய ஒரு ஆபராக பணப்பெட்டி டாஸ்க் பிக் பாஸ் கொடுத்து வருகிறார். அந்த வகையில் இதுவரை நடந்து முடிந்த சீசன்களில் கவின், அமுதவாணன், பூர்ணிமா, சிபி மற்றும் கேப்ரில்லா ஆகியோர்கள் மட்டுமே பணப்பெட்டியை எடுத்துட்டு வெளியே போய் இருக்கிறார்கள்.

அதே மாதிரி இந்த பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சிகள் பணப்பெட்டியை எடுத்துட்டு வெளியே போவதற்கு இரண்டு போட்டியாளர்கள் தயாராக இருக்கிறார்கள். அதில் முதலில் இருப்பது ஜெஃப்ரி, ஏனென்றால் இவர் தான் சில வாரங்களுக்கு முன் ரஞ்சித்திடம் எப்பொழுது மணி டாஸ்க் வரும் என்று ஆர்வமாக கேட்டு விசாரித்து வைத்திருக்கிறார். அதிலும் கடந்த சில வாரங்களாக ஜெஃப்ரி, விஜய் சேதுபதியிடம் இருந்து நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றுக் கொண்டிருப்பது அவருக்கே தெரியும்.

அதனால் எப்படியும் வின் ஆவதற்கு வாய்ப்பில்லை என்று புரிந்து கொண்ட ஜெஃப்ரி புத்திசாலித்தனமாக பணப்பெட்டியை எடுத்துட்டு போக தயாராக இருக்கிறார். இன்னொரு போட்டியாளர் யார் என்றால் ராணவ், இவர் என்னதான் நன்றாக விளையாடி வந்தாலும் தற்போது கையில் அடிபட்டு இருப்பதால் மூன்று வாரங்கள் ஓய்வெடுக்கும் படி மருத்துவர் ஆலோசித்து இருக்கிறார். அதனால் எப்படியும் தொடர்ந்து விளையாடவும் முடியாது சும்மா இருந்துகிட்டு வெற்றியும் பெற முடியாது என்பதால் பணப்பெட்டியை எடுப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

மேலும் முத்துக்குமாருக்கு அடுத்தபடியாக ராணவுக்கு தற்போது மக்களிடம் அதிக வரவேற்பு கிடைத்து ஓட்டுக்களையும் பெற்று வருகிறார். அதனால் தொடர்ந்து நல்லா விளையாடி வந்தால் நிச்சயம் வெற்றி பெறவும் வாய்ப்பு இருக்கிறது என்று மக்கள் எதிர்பார்த்த இந்த தருணத்தில் ராணவ் பணப்பெட்டியை எடுத்து வெற்றியை மிஸ் பண்ண வாய்ப்பு இருக்கிறது.

Trending News