வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

முதல் தடவையாக நாமினேஷனுக்கு வந்த 2 போட்டியாளர்கள்.. மொத்தமாக பேக்கப் பண்ண தயாராகும் விஷப்பாட்டில்

Bigg Boss Tamil 8: இந்த வாரம் நாமினேசன் லிஸ்ட்க்கு 11 போட்டியாளர்கள் தேர்வாகியிருக்கிறார்கள். இதில் வழக்கம் போல முத்துக்குமார், விஷால், ஜாக்லின் அதிக வாக்குகளை பெற்று முதல் மூன்று இடத்தை பிடித்து விட்டார்கள். அடுத்ததாக தீபக், ரஞ்சித், பவித்ரா, அருண் இவர்களுக்கு நடுநிலையாக ஓட்டுகள் கிடைத்து முன்னும் பின்னும் ஆக இருக்கிறார்கள்.

இதற்கிடையில் அர்னாவ் பிக் பாஸ் வீட்டை விட்டு எலிமினேட் ஆகி போன பின்னே அன்சிதாவையும் அனுப்ப வேண்டும் என்று மக்கள் நினைத்து இருந்தார்கள். ஆனால் இவருக்கு முன்னதாக போக வேண்டிய சில போட்டியாளர்கள் உள்ளே இருப்பதால் அவர்களில் ஒவ்வொருவராக வழி அனுப்பி விட்டு அன்சிதாவை கடைசியில் பார்த்துக்கலாம் என்று ஒதுக்கி விட்டார்கள்.

அந்த வகையில் இந்த வாரம் எலிமினேஷனில் இருந்து தப்பித்து விட்டார். அடுத்ததாக அதிகமான பொய்களையும் மாத்தி மாத்தி பேசக்கூடிய தந்திரவாதியாக சாச்சினா உள்ளே விளையாண்டு கொண்டிருக்கிறார். அதனால் முதலில் இவரை வெளியே அனுப்ப வேண்டும் என்று மக்கள் தீவிரமாக காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் தற்போது இவருக்கு பதிலாக பலியாடாக இரண்டு போட்டியாளர்கள் சிக்கி விட்டார்கள்.

அவர்கள் இருவருமே முதல் தடவை நாமினேஷனுக்கு வந்திருக்கிறார்கள். அதில் ஊர் வம்பு பேசி, உள்ளதை உள்ளபடி சொல்லாமல் போட்டுக் கொடுத்து விஷப்பாட்டில் ஆக இருக்கும் ஆனந்தி தான் மக்களின் முதல் டார்கெட் என்பதற்கு ஏற்ப இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது ஆனந்தி. இவர்தான் ஓட்டு கணக்கெடுப்பின்படி குறைவான ஓட்டுகளை பெற்றிருக்கிறார்.

ஆனால் இவருக்கு முன்னதாக இன்னொரு போட்டியாளரும் குறைவான ஓட்டுகளை பெற்றிருக்கிறார். பிக் பாஸ் வீட்டுக்குள் வந்ததிலிருந்து மேக்கப் போடுவது, ஜாக்லின்னை மட்டம் தட்டுவது போன்ற சில வேலைகளை மட்டும் பார்த்துக் கொண்டு வரும் சுனிதா இவரும் இந்த வாரம் நாமினேட்டுக்கு தேர்வாகியிருக்கிறார். அந்த வகையில் ஆனந்தி மற்றும் சுனிதாவும் குறைவான ஓட்டுகளை பெற்றிருக்கிறார்கள்.

ஆனால் சுனிதாவை எப்படியாவது விஜய் டிவி சேனல் காப்பாற்ற சில சூட்சுமங்களை பண்ணிவிடும். அப்படி எதுவும் செய்யாமல் இருந்தால் இந்த வாரம் டபுள் எவிக்ஷனாக ஆனந்தி மற்றும் சுனிதா வெளியேற வாய்ப்பு இருக்கிறது. அப்படி இல்லை என்றால் இவர்களுக்கு பதிலாக பிக் பாஸ் வீட்டுக்குள் டம்மியாக இருக்கும் சாச்சினா மற்றும் அன்சிதாவை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே அனுப்ப விஜய் டிவி முடிவெடுத்து இருக்கலாம். எது எப்படி இருந்தாலும் இந்த நான்கு போட்டியாளர்கள் தான் இந்த வாரத்தில் கம்மியான ஓட்டுகளை பெற்று இருக்கிறார்கள்.

Trending News