புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

ஜெயம் ரவியின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியதா சைரன்.? 2 நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரிப்போர்ட்

2 Days Box Office Collection Of Siren: கடந்த ஐந்து வருடங்களாகவே எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி படங்களை கொடுக்காத ஜெயம் ரவி சைரன் படத்தை தான் முழுமையாக நம்பி இருந்தார். ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர்.

டிரெய்லரின் மூலம் எதிர்பார்ப்பை தூண்டி இருந்த இப்படம் கடந்த 16ஆம் தேதி வெளியானது. நல்ல ஒப்பனிங்கை பெற்ற இப்படத்தில் ஜெயம் ரவியின் நடிப்பும் பாராட்டுகளை பெற்றது. அந்த வகையில் முதல் நாளில் சைரன் 1.40 கோடிகளை வசூலித்தது.

அதைத் தொடர்ந்து இரண்டாவது நாளில் இந்த வசூல் கணிசமாக அதிகரித்துள்ளது. அதன்படி இப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் 1.75 கோடியாக இருக்கிறது. இந்த இரண்டு நாள் வசூலையும் சேர்த்தால் மொத்தமாக 3.15 கோடிகள் வசூல் ஆகி இருக்கிறது.

Also read: ஜெயம் ரவிக்கு சைரன் கை கொடுத்ததா, காலை வாரி விட்டதா.? முதல் நாள் கலெக்ஷன் ரிப்போர்ட்

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இதன் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொன்னியின் செல்வன் படத்தை தவிர்த்து அகிலன், இறைவன் என வெளிவந்த ஜெயம் ரவியின் படங்கள் பெரிய அளவில் லாபம் பார்க்கவில்லை.

அதை வைத்து பார்க்கும் பொழுது சைரன் அவருடைய மார்க்கெட்டை பழைய நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இதனால் தற்போது பயங்கர குஷியில் இருக்கும் அவர் தனி ஒருவன் 2 மூலம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து தன்னுடைய இடத்தை தக்க வைக்க வேண்டும் என்ற முயற்சியிலும் இருக்கிறார்.

Also read: டிவி சீரியல் தான் உங்களுக்கு லாயக்கு.. ஜெயம் ரவியின் சைரனை கிழித்து தொங்க விட்ட ப்ளூ சட்டை

Trending News