ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

இரண்டு திருமணம் செய்தும் விடாத ஆசை.. 61 வயதில் புது மனைவிக்கு எங்கும் அண்ணாமலை பட நடிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 1992 ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் அண்ணாமலை. குஷ்பூ, நிழல்கள் ரவி, மனோரமா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. நட்பு, துரோகம் என சென்டிமென்ட் கலந்த மசாலா திரைப்படமாக வெளிவந்த இப்படம் பேமிலி ஆடியன்ஸை அதிக அளவில் கவர்ந்தது.

இதில் ரஜினிக்கு நண்பராக அசோக் என்ற கேரக்டரில் நடித்தவர்தான் சரத்பாபு. தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் ஹீரோவாகவும், குணச்சித்திரம் போன்ற பல கேரக்டர்களில் நடித்த இவர் சமீபகாலமாக தமிழ் திரைப்படங்களில் நடிக்கவில்லை. தற்போது 71 வயதாகும் சரத்பாபுவின் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்கள் ரசிகர்களை அதிர்ச்சியாக்கி இருக்கிறது.

Also read : ரஜினி ஹீரோயிசம் காட்டாத 5 படங்கள்.. இன்று வரை பேசப்படும் முள்ளும் மலரும்

அதாவது இவர் தன்னுடைய 22 வயதிலேயே தெலுங்கு நடிகை ரமா பிரபாவை திருமணம் செய்து இருக்கிறார். சில வருடங்கள் கழித்து அவரை விவாகரத்து செய்த சரத்பாபு பிரபல மூத்த வில்லன் நடிகராக இருந்த எம் என் நம்பியாரின் மகள் சினேகா நம்பியாரை திருமணம் செய்து இருக்கிறார். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேல் இணைந்து வாழ்ந்த இவர்கள் இருவரும் கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டப்படி விவாகரத்து செய்து பிரிந்தனர்.

இப்படி இரண்டு திருமணம் செய்து அது தோல்வியில் முடிந்த பிறகும் கூட அவருக்கு மூன்றாவதாக திருமணம் செய்யும் ஒரு ஆசை எட்டிப் பார்த்து இருக்கிறது. அதனால் அவர் தன்னுடைய 61 வது வயதில் மீண்டும் திருமணம் செய்து கொள்ளும் முடிவிற்கு வந்திருக்கிறார். அது குறித்த அறிவிப்பு கூட அந்த சமயத்தில் வெளியாகி திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Also read : வெளிவேஷம் போடத் தெரியாத ரஜினி.. சூப்பர் ஸ்டார் என நிரூபித்த தருணம்

இதனால் அவர் பற்றி ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தது. அதை பார்த்த சரத்பாபு எனக்கு 60 வயது ஆனாலும் இன்னும் இளமையாக தான் இருக்கிறேன். மனதளவில் மட்டுமல்ல உடலளவிலும் எனக்கு வயசு ஏறவில்லை என்று பதிலடி கொடுத்தார். அதன் பிறகு அவர் மூன்றாவதாக யாரை திருமணம் செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டது.

அந்த சமயத்தில் அவர் நடிகை நமீதாவுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படம் வெளியானது. அதனால் நமிதாவை தான் அவர் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற செய்திகளும் தீயாக பரவியது. அதில் எந்தவிதமான உண்மையையும் இல்லை என்று விளக்கம் அளித்த சரத்பாபு தன்னுடைய மூன்றாம் திருமணத்தை பற்றி மட்டும் எதுவும் கூறவில்லை. அந்த சம்பவம் நடந்து பல வருடங்கள் கடந்த பிறகும் கூட இப்போது வரை அவருடைய அந்த மூன்றாவது மனைவி யார் என்று யாருக்கும் தெரியாமலேயே இருக்கிறது.

Also read : சூப்பர் ஸ்டாரை காரணம் காட்டி ஐஸ்வர்யா கொடுக்கும் பிரஷர்.. கட் அண்ட் ரைட்டாக பேசும் லைக்கா

Trending News