வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

அருண் விஜய் முதல் படத்தை இயக்கிய 2 இயக்குனர்கள்.. பாதி படத்தை முடித்து டீலில் விட்ட பரிதாபம்

சினிமாவில் பல வருடங்களாக பெரிய வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் என்று மிக போராடி வருகிறவர் தான் அருண் விஜய். இவர் தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். அதற்காக என்னெல்லாம் கஷ்டப்பட்டு தியாகம் பண்ணிக்கொண்டு இருக்கிறார். ஏனென்றால் இவரை வைத்து இயக்குவது பாலா என்பதால் தான். இவர் எந்த அளவுக்கு சக்கையை புழிந்து எடுப்பார் என்பது நம் அனைவரும் அறிந்ததே.

ஆனாலும் இவருடைய முழு கவனமும் இந்த படத்தின் மூலம் இவருடைய நீண்ட நாள் கனவாக இருக்கக் கூடிய வெற்றி படத்தை பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான். அப்படிப்பட்ட இவர் 90ல் சினிமாவிற்கு அடி எடுத்து வைத்தார். இவர் ஹீரோவாக அறிமுகமான படம் தான் முறை மாப்பிள்ளை. இந்த படத்தை இயக்கியது இயக்குனர் சுந்தர் சி.

Also read: அஜித்துக்கு அடுத்து ஜாதகத்தை கணித்த இயக்குனர்.. அருண் விஜய்க்கு ஒர்க்அவுட் ஆன சுக்கிர திசை

பொதுவாகவே சுந்தர் சி படம் என்றால் அவருக்கு என்று ஒரு தனி ஸ்டைல் இருக்கும். அதாவது முக்கியமாக இவரது படங்களில் காமெடிக்கு பஞ்சமே இருக்காது. அந்த அளவிற்கு வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் விஷயத்தில் இவரை மிஞ்சும் அளவிற்கு கெட்டிக்காரர் யாரும் இல்லை. அப்படிப்பட்டவர் இயக்கத்தில் அருண் விஜய் முதல் படம் ஆரம்பிப்பதால் மிகவும் சந்தோஷப்பட்டு இருக்கிறார்.

ஆனால் இந்த படத்தை முழுவதுமாக சுந்தர்சி யால் எடுக்க முடியவில்லை. முக்கால்வாசி படத்தை எடுத்த பிறகு இவருடைய அசிஸ்டன்ட் இயக்குனரான பிரபு சாலமன் அவரிடம் இந்த படத்தை கொடுத்து விட்டு இன்னும் கால்வாசி படம் தான் எடுக்க வேண்டும். இனிமேல் நீ பார்த்துக் கொள் என்று சொல்லி கிளம்பி விட்டார். அப்பொழுது அருண் விஜய் என்ன நம்முடைய முதல் படமே இப்படி ஆயிட்டு என்று மிகவும் வருத்தப்பட்டு இருக்கிறார்.

Also read: புகழை அடைய படாதபாடு படும் அருண் விஜய்.. ஓவர் டார்ச்சர் செய்யும் இயக்குனர்

அதன் பிறகு அருண் விஜய், பிரபு சாலமன் இடம் என்ன ஆச்சு ஏன் திடீர்னு பாதியில கிளம்பி விட்டாங்க என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர் சுந்தர் சி உள்ளத்தை அள்ளித்தா படத்தை எடுத்து முடித்து விட்டார். அந்த படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளை பார்ப்பதற்காக அவசர வேலையாக என்னிடம் ஒப்படைத்து விட்டார் என்று கூறி இருக்கிறார். அதன் பிறகு முறை மாமன் மீதி படத்தை பிரபு சாலமன் தான் இயக்கி இருக்கிறார்.

இப்படி அருண் விஜய் நடித்த முதல் படத்திலேயே அதுவும் ஒரு படத்திற்கு இரண்டு இயக்குனர்கள் சேர்ந்து எடுத்திருக்கிறார்கள். அதே நேரத்தில் சுந்தர் சி போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலையை பார்த்த உள்ளத்தை அளித்த படமும் அவருக்கு மிகப்பெரிய மாஸ் ஹிட் படமாக அமைந்தது. ஆனாலும் என்ன இருந்தாலும் அருண் விஜயின் முதல் படத்தை பாதியிலேயே விட்டுப் போனது அவருக்கும் மிகவும் பயத்தை கொடுத்திருக்கிறது.

Also read: இயக்குனர் பாலாவால் நொந்து போன அருண் விஜய்.. படாதபாடு பட்டு வரும் பரிதாபம்

Trending News