ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 26, 2025

மயில்சாமி நடித்த ரஜினியின் 2 படங்கள்.. கடைசி வரை நிறைவேறாமல் போன மற்றுமொரு ஆசை

நடிகர், டப்பிங் கலைஞர், மிமிக்ரி கலைஞர் என பன்முகத்தன்மைக் கொண்ட நடிகர் மயில்சாமி அவர்கள், மாரடைப்பால் அண்மையில் காலமானார். இவரது மறைவு திரையுலகினர் முதல் ரசிகர்கள் வரை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ள மயில்சாமியின் உடலுக்கு பல திரைப்பிரபலங்கள் கண்ணீருடன் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இயக்குனர் மற்றும் நடிகரான பாக்யராஜின் தாவணி கனவுகள் திரைப்படத்தில் சிறு வேடத்தில் நடித்து அறிமுகமான மயில்சாமி, தொடர்ந்து 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அசத்தியவர். தனக்கென தனி பாணியில் நடித்த மயில்சாமி, கமலஹாசன், விஜய், அஜித், வடிவேலு, விவேக், விக்ரம், தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர்.

Also Read: சாப்பாட்டுக்கு கூட காசு இல்ல, தங்க டாலரை பரிசளித்த நடிகர்.. கலாமிற்கு பின் விவேக்கே வியந்து பார்த்த ஒரே மனிதர்

இப்படி பல நடிகர்களுடன் இணைந்து நடித்த மயில்சாமி ரஜினியுடன் இணைந்து 2 படங்களில் மட்டுமே நடித்தார். இந்நிலையில் ரஜினியால், மயில்சாமியின் கடைசி வரை நிறைவேறாத ஆசை ஒன்று வெளியாகியுள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மயில்சாமியின் உடலை பார்த்து அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மயில்சாமி தனது நெருங்கிய நண்பர் என்றும் அவர் ஒரு சிவன் பக்தர் என்பதால் சிவராத்திரி அன்றே, அவரை சிவன் அழைத்து சென்று விட்டார் என்றும் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், தன்னை சிவன் கோவிலுக்கு சென்று மயில்சாமி பாலபிஷேகம் செய்ய சொன்னதாக தான் கேள்விப்பட்டதாகவும், அவருடைய கடைசி ஆசையை விரைவில் நான் நிறைவேற்றுவேன் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார். தற்போது இவரது பேட்டி வைரலாகி வரும் நிலையில், மயில்சாமியின் மற்றுமொரு ஆசை சூப்பர்ஸ்டாரால் கடைசிவரை நிறைவேறாமல் போயுள்ளது.

Also Read: வரிசையாக கதை கேட்கும் ரஜினிகாந்த்.. அடுத்த படத்தை இயக்க காத்திருக்கும் 5 இயக்குனர்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கவுண்டமணி முதல் சூரி வரை பல காமெடி நடிகர்களுடன் இணைந்து நடித்துக்கொண்டிருப்பவர். அந்த வகையில் மயில்சாமி, சூப்பர்ஸ்டாருடன் இணைந்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான சிவாஜி மற்றும் 2.0 திரைப்படங்களில் நடித்தார். ஆனால் இந்த இரண்டு படங்களிலுமே சூப்பர்ஸ்டாருடன் சேர்ந்து நடிப்பது போன்ற காட்சிகள் இருக்காது. சின்ன கெஸ்ட் ரோலில் தான் மயில்சாமி தலைக்காட்டி நடித்திருப்பார்.

எப்படியாவது சூப்பர்ஸ்டாருடன் இணைந்து பெயர் சொல்லும் அளவிற்கு ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்பது தான் மயில்சாமியின் கடைசி ஆசையாக இருந்தது. ஆனால் மயில்சாமி உயிரோடு இருக்கும் வரை இந்த ஆசை அவருக்கு நிறைவேறாமல் போய்விட்டது. எத்தனையோ படங்களில் நடித்து ரசிகர்களை கவலை மறந்து சிரிக்க வைத்த மயில்சாமியின் இந்த நிறைவேறாத கடைசி ஆசையை கண்டு பலரும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

Also Read: மயில்சாமி காமெடியில் கலக்கிய 6 படங்கள்.. வாட்ச்மேன் நாராயணனை மறக்க முடியுமா!

Trending News