சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

விக்ரம் படத்தை மிஞ்சிய எதிர்பார்ப்பு.. KH233 படத்தில் கமலுடன் நடிப்பதற்கு போட்டி போடும் 2 ஹீரோஸ்

Actor Kamal: உலகநாயகன் கமலஹாசன் நடித்திருக்கும் இந்தியன் 2 மற்றும் கல்கி 2898 AD போன்ற படங்கள் விரைவில் ரிலீஸ் ஆகப்போகிறது. இந்த நிலையில் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து தற்போது கல்கி படப்பிடிப்பில் கமல் தீவிரமாக நடித்து வருகிறார்.

இந்த படத்தை முடித்துவிட்டு கமல் அடுத்ததாக KH233 படத்தினை தனது சொந்த தயாரிப்பில் ஹெச் வினோத்-தின் இயக்கத்தில் இணையுள்ளார். இதில் கமல் இரண்டு கெட்டப் வேற போடப் போகிறார். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார்.

Also Read: சென்சாரையே காது கிழிய கதறவிட்டாரா லோகேஷ்.? விஜய் மார்க்கெட்டை உடைக்க வெளியான போலி சர்டிபிகேட்

மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தின் மூலம் இண்டஸ்ட்ரியல் ஹிட் கொடுத்த கமல், KH233 படத்தில் ராணுவ வீரராக நடிக்க உள்ளார். இதன் சூட்டிங் வரும் நவம்பர் முதல் வாரத்தில் துவங்குவதாகவும் தகவல்கள் வெளியானது.

கமலுடன் விக்ரம் படத்தில் சந்தானமாக நடித்து மிரட்டி விட்ட விஜய் சேதுபதி மறுபடியும் KH233 படத்தில் முக்கிய கேரக்டரில் உலக நாயகனுடன் இணைந்து நடிப்பதாக சொல்லப்பட்டது. இப்போ இதுல சிம்புவும் நடிக்கப் போகிறாராம்.

Also Read: உதயநிதி மறுத்ததால் ஜெயம் ரவியுடன் கமிட்டான கிருத்திகா.. விஜய் சேதுபதி பட சாயலில் கொடுக்கப்பட்ட கடைசி வாய்ப்பு

காரணம் அவர் நீளமான முடி வச்சு இருக்காரு. அதனால் அதை வைத்து அவரை இந்த படத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இயக்குனர் வினோத் யோசித்திருக்கிறார். ஆல் ரெடி சிம்பு நடிக்கும் படத்தில் கமல் நடிக்கிறார், இதுல இது வேறயா.  KH233 படத்தில் போட்டி போட்டுக்கொண்டு விஜய் சேதுபதி, சிம்பு இருவரும் கமிட்டாகி இருக்கின்றனர்.

அதிலும் கமலின் பிரம்மாண்டமான தயாரிப்பில் STR 48 படத்தில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க சிம்பு ஏற்கனவே கமிட் ஆகி இருக்கிறார். இந்த நிலையில் தற்போது கமலின் படத்தில் இணையுள்ளது தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Also Read: 100% ப்ரொபஷனல் சாரே.! மணிரத்தினம், ஷங்கரை மிரளவிடும் லோகேஷ்

Trending News