ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

விஜய் டிவியில் புத்தம் புது சீரியல்.. அடடே கேப்ரில்லாவுக்கு 2 ஹீரோக்களா.!

விஜய் டிவியில் மதிய நேரத்தில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியலில் கதாநாயகனாக திரவியமும், கதாநாயகியாக பவித்ராவும் நடித்திருந்தனர். சமீபத்தில் இந்த சீரியல் நிறைவடைந்ததை தொடர்ந்து ஈரமான ரோஜாவே சீரியலின் இரண்டாம் பாகம் தற்போது மீண்டும் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

இதில் கதாநாயகியாக பிக்பாஸ் பிரபலம் கேப்ரில்லா நடிக்கவுள்ளார். இவருடன் தேன்மொழி சீரியலின் கதாநாயகன் சித்தார்த் ஜோடி சேரப்போகிறார் என்ற தகவல் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் வைரலாக பேசப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஈரமான ரோஜாவே பாகம் ஒன்றில் கதாநாயகனாக நடித்த திரவியம் ஈரமான ரோஜாவே சீரியலின் இரண்டாம் பாகத்திலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். ஆகவே ஈரமான ரோஜாவே2 சீரியலில் இரண்டு கதாநாயகன் களமிறங்குகின்றனர்.

அத்துடன் சிறப்பாக நடனம் ஆடும் கேப்ரில்லா வெள்ளித்திரையிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். எனவே தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற பல்வேறு முயற்சியை மேற்கொண்ட கேப்ரில்லா தற்போது சின்னத்திரையில் முதல் முதலாக ஈரமான ரோஜாவே2 சீரியலின் மூலம் என்ட்ரி கொடுக்க உள்ளார்.

ஏற்கனவே ஈரமான ரோஜாவே2 சீரியலுக்காக ப்ரோமோ குறித்த சூட்டிங் அனைத்தும் நிறைவடைந்து விரைவில் வெளியாக உள்ளது. இந்தப் ப்ரோமோவின் மூலம் புத்தம் புது சீரியலான ஈரமான ரோஜாவே 2 சீரியலில் கேப்ரில்லா, சித்தார்த், திரவியம் உள்ளிட்டோரை தவிர இன்னும் யார் யார் எடுக்கப் போகின்றனர் என்பது தெரியவரும்.

அத்துடன் இந்த கதை ஏற்கனவே ஈரமான ரோஜாவே முதல் பாகத்தின் தொடர்ச்சியா? அல்லது புது கதைக்களத்தை உருவாக்குமா? என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்

Trending News