வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

விக்ரம் பட சந்தனம் கதாபாத்திரத்தை நிராகரித்த 2 ஹீரோக்கள்.. பெத்த தொகைக்கு பணிந்த விஜய் சேதுபதி

2 heroes Rejects lokesh flim: கமல் செகண்ட் இன்னிங்ஸில் பட்டைய கிளப்பிய படம் விக்ரம். தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் 150 கோடிக்கு மேல் லாபம் பார்த்து, அடுத்தடுத்து கமல் பல படங்களை தயாரிக்க உதவியது லோகேஷ் கனகராஜின் இந்த படம் தான். இப்பொழுது கமல் சிவகார்த்திகேயன், சிம்புவை வைத்து படங்கள் தயாரித்து வருகிறார்.

விக்ரம் படத்தில் சந்தனம் என்னும் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி போதை மருந்து கடத்தும் ஆசாமியாக நடித்திருப்பார். அந்த கதாபாத்திரத்துக்காக லோகேஷ் கனகராஜ் பல நடிகர்களை முதலில் மனதில் தேர்வு செய்துள்ளார், அவர்கள் நிராகரிக்கவே இந்த கதாபாத்திரம் விஜய் சேதுபதி இடம் சென்றுள்ளது.

எப்பொழுதுமே நன்றாக நடித்து, இப்பொழுது வாய்ப்பு இல்லாமல் இருக்கும் கதாபாத்திரங்களை தன் படத்தில் இணைத்துக்கொள்வார் லோகேஷ். அப்படி அவர் மீண்டும் நடிக்க கொண்டு வந்த கதாபாத்திரங்கள் தான் சார்லி, மன்சூர் அலிகான் போன்றவர்கள்.

பெத்த தொகைக்கு பணிந்த விஜய் சேதுபதி

விக்ரம் பட சந்தனம் கதாபாத்திரத்திற்காக பழைய மிரட்டல் வில்லன் நடிகர்களை தேடிக் கொண்டிருந்தார். ஆனால் இது ஒரு போதைப் பொருள் கதை என்பதால் இதற்கு எஸ் ஜே சூர்யா மற்றும், பிரபுதேவா இருவரையும் நாடியுள்ளார்.

பல படங்களில் நடித்துக் கொண்டிருந்த எஸ் ஜே சூர்யா இந்த படத்திற்கு கால் சீட் கொடுக்க மறுத்துவிட்டார். பிரபுதேவா பாலிவுட் படங்களில் நடன கலைஞராக செயல்பட்டதால் அவராலும் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது.

கடைசியாக விஜய் சேதுபதி இந்த படத்தில் 15 கோடிகள் வரை சம்பளம் பெற்றுக் கொண்டு நடித்தார். 500 கோடிகள் இந்த படம் பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனை செய்தது. கமல் விலை உயர்ந்த கார் ஒன்றை லோகேஷ் கனகராஜுக்கு பரிசளித்தார்.

Trending News