செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

பெரிய நடிகர் என்று சிவக்குமார் ஒத்துக் கொண்ட 2 ஹீரோக்கள்.. யாராலும் மறுக்கவும், மறக்கவும் முடியாது

சிவக்குமார் ஒரு காலகட்டத்தில் ரஜினி, கமல் போன்ற நடிகர்களுக்கு இணையாக பேசப்பட்டார். அதன் பின்பு படங்களில் ஹீரோ, ஹீரோயின்களுக்கு அப்பா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த சூழலில் இப்போது சினிமாவை விட்டு சிவகுமார் ஒதுங்கி உள்ளார். ஆனாலும் தனது உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார்.

உடற்பயிற்சி, உணவு, யோகா ஆகியவற்றால் இப்போதும் இளமையாகவே காட்சியளிக்கிறார். இந்நிலையில் சிவக்குமார் ஒரு சிறந்த மேடைப் பேச்சாளர். சமீபத்தில் விழா மேடையில் பேசிய சிவகுமார் தனது சினிமா வாழ்க்கை குறித்து ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார். அதில் தான் ஹீரோ என்று ஒத்துக் கொண்ட இரு நடிகர்கள் யார் என்பதை கூறியுள்ளார்.

Also Read : 65 வயதில் 30 வயது போல் இருக்கும் நடிகர்.. சிவக்குமார் வழியில் 35 வருடங்களாக சினிமாவில் இருக்கும் ஜென்டில்மேன்

பொதுவாக தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் எண்ணற்ற ஹீரோக்கள் வருகிறார்கள். ஆனால் காலத்தால் அழியாமல் மக்கள் மனதில் நிற்கக்கூடிய ஹீரோக்கள் என்றால் அது சொற்பம் தான். அந்த வகையில் சிவகுமார் பேசுகையில் ஹீரோவாக ஒத்துக்கொண்ட இரு நடிகர்கள் யார் என்றால் சிவாஜி மற்றும் கமல்ஹாசன் தான் என்று கூறியுள்ளார்.

அதாவது பொதுவாக சிவாஜி எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் பின்னி பெடலெடுக்கக்கூடியவர். மேலும் அவருடைய கதாபாத்திரங்களை பார்த்தால் எது நிஜம், எது நடிப்பு என்று தெரியாது. அந்த அளவுக்கு கதாபாத்திரத்துடன் சிவாஜி ஒன்றி போய்விடுவார். தற்போது வரை சிவாஜியின் இடத்தை பிடிக்க எந்த ஒரு நடிகரும் வரவில்லை.

Also Read : ஒரே குடும்பத்தில் இத்தனை நடிகர்களா.. சிவாஜி குடுமபத்தையே மிஞ்சிய சூப்பர்ஸ்டார் குடும்பம்

இந்நிலையில் சிவாஜிக்கு அடுத்தபடியாக சினிமாவுக்காக பல அர்ப்பணிப்புகளை செய்தவர் உலக நாயகன் கமல்ஹாசன். முதல் முதலாக தமிழ் சினிமாவிற்கு பல புதிய தொழில்நுட்பத்தை கொண்டு வந்ததில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. மேலும் சினிமாவுக்காக நிறைய மெனக்கெட்டு பல விஷயங்களை செய்து உள்ளார்.

இப்போது கூட கமல் நடித்து வரும் இந்தியன் 2 படத்திற்கு ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் மேக்கப் போட வேண்டி உள்ளதாம். இவ்வாறு ஒவ்வொரு விஷயத்தையும் கமல் சினிமாவுக்காக பார்த்து பார்த்து செய்து வருகிறார். ஆகையால் தான் சிவாஜி மற்றும் கமல்ஹாசனை சிறந்த நடிகர்களாக சிவகுமார் கூறிவுள்ளார்.

Also Read : எம்ஜிஆரின் கல்லாபெட்டிய நிரப்பிய 5 படங்கள்.. சிவாஜியிடம் இருந்து திரும்பி ஓடி வந்த தயாரிப்பாளர்கள்

Trending News