வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

தளபதி 68-ல் இணைந்த மூன்று மைக்கேல் ஜாக்சன்.. விஜய்க்கு டஃப் கொடுக்க போகும் 2 ஹீரோக்கள்

2 heroes give tough to Vijay: லியோ படத்தின் வெற்றி விழாவை முடித்த கையோடு விஜய் அடுத்ததாக தளபதி 68 படத்தின் படப்பிடிப்பிற்காக தாய்லாந்து கிளம்பிவிட்டார். ஏஜிஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெறுகிறது.

இதில் விஜய் உடன் மூன்று மைக்கேல் ஜாக்சன் இணைந்து டான்சில் பிச்சு உதறி இருக்கின்றனர். விஜய்யுடன் தளபதி 68-ல் பிரபுதேவா சேர்ந்து நடிக்கிறார். பிரபுதேவா நடிகராய் ஜெயிக்காவிட்டாலும் இன்றுவரை நடனத்தில் அவரை அடிச்சுக்க ஆளில்லை.

பாலிவுட் சூப்பர் ஸ்டார்களான ஷாருக்கான், சல்மான் கான் என எல்லோரும் இவர் கால் சீட் கிடைக்காமல் கஷ்டப்பட்ட காலங்களும் உண்டு. அந்த அளவிற்கு இவர் பிஸியாக நடித்தவர். பிரபுதேவா சமீப காலமாக படங்களை தயாரித்தும் நடித்தும் கொண்டிருந்தார்.

Also Read: சக்சஸ் மீட்டிங் முடிந்த கையோடு தாய்லாந்து கிளம்பிய விஜய்.. புதிய ஹேர் ஸ்டைலில் வெளியான தாறுமாறான புகைப்படம்

ஆனால் அவருக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. இப்போது தளபதி 68ல் விஜய்யுடன் இணைந்து ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இவர்களுடன் பிரசாந்தும் இணைந்து நடிக்கிறார். பிரசாந்த் மற்றும் பிரபுதேவா இருவருக்கும் 50 வயதாகிறது, விஜய்க்கு வயது 49.

ஐம்பது வயதானாலும் நாங்கள் மைக்கேல் ஜாக்சன் தான் என இந்த படத்தில் இவர்கள் மூவரும் நிரூபிக்க போகின்றனர். தளபதி 68 படத்தில் நான்கு ஹீரோக்கள் சேர்ந்து ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகின்றனர். பிரசாந்த், பிரபுதேவா, விஜய் இவர்களுடன் அஜ்மலும் இந்த பாடலில் ஆடி இருக்கிறார்.

தளபதியின் படங்களில் இடம்பெறும் பாடல்களில் விஜய்யின் டான்ஸ் மாஸ் ஆக இருக்கும். அதிலும் இப்போது பிரபு தேவாக்கு டஃப் கொடுத்துள்ளனர் விஜய் மற்றும் பிரசாந்த். இவர்களுடன் அஜ்மலும் பின்னி பெடல் எடுத்துள்ளார். இந்த பாடல் தான் இந்த படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Also Read: சக்சஸ் மீட்டிங் முடிந்த கையோடு தாய்லாந்து கிளம்பிய விஜய்.. புதிய ஹேர் ஸ்டைலில் வெளியான தாறுமாறான புகைப்படம்

Trending News