ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

மைக் மோகன் கேரக்டரை நிராகரித்த 2 ஹீரோக்கள்.. சினேகா கேரக்டரை மிஸ் பண்ணிய நடிகை, உளறிய வெங்கட் பிரபு

Goat: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் படம் ரிலீஸ் ஆகி ஒரு வாரத்தை தாண்டிய நிலையிலும் தற்போது வரை திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலை மோதிக் கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் விஜய் ஜாலியாக நடித்ததை பல வருடங்களுக்கு பின் பார்க்க முடிந்தது.

அத்துடன் இத்தனை நாள் சினிமா துறையில் ஆட்ட நாயகனாக பல வெற்றி படங்களை போராடி கொடுத்ததால் கடைசியாக போற போக்கில் ஜாலியா குட் பாய் சொன்ன மாதிரி விஜய் நடித்திருப்பது பார்க்கவே நன்றாக இருந்தது. தற்போது இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெங்கட் பிரபு சில பேட்டிகளை கொடுத்து வருகிறார். அந்த வகையில் சில கேரக்டர்கள் இதில் நடிக்க முடியாமல் போனதற்கான காரணத்தையும் அவர்கள் யார் என்பதையும் கூறியிருக்கிறார்.

சினேகா கேரக்டரை புகழ்ந்து தள்ளிய நடிகை

அதாவது இப்படத்தின் வில்லனாக மோனன் கேரக்டரில் நடித்திருக்கும் மைக் மோகன் பல வருடங்களுக்குப் பிறகு கம்பேக் கொடுத்திருக்கிறார். இது இவருக்கு ஒரு கலவையான விமர்சனங்களை கொடுத்தாலும் படத்திற்கு கொஞ்சம் பிளஸ் பாயிண்டாக அமைந்திருக்கிறது. ஆனால் முதலில் வெங்கட் பிரபு இந்த கேரக்டருக்கு இரண்டு நடிகர்களை தேர்வு செய்து இருக்கிறார்.

ஆனால் அவர்கள் இருவருமே வேண்டாம் என்று நிராகரித்து விட்டார்கள். அந்த ஹீரோக்கள் யார் என்றால் அபிமன்யு சித்தார்த்தாக கம்பேக் கொடுத்த அரவிந்த்சாமி மற்றும் 90ஸ் ரசிகர்களுக்கு சாக்லேட் பாயாக பெண்களின் மனதை கொள்ளை அடித்த மாதவன் தான் மோனன் கேரக்டரில் நடிப்பதற்கு வெங்கட் பிரபுவின் தேர்வாக இருந்தது. ஆனால் வில்லன் கேரக்டர் பெருசாக சொல்லிக்கிற மாதிரி இல்லை என்பதால் இரண்டு பேருமே நிராகரித்து விட்டார்கள். அதனால் தான் கடைசியில் மோகனை நடிக்க வைத்திருக்கிறார்.

இதே மாதிரி இன்னொரு முக்கிய கேரக்டரை மிஸ் பண்ணியது நயன்தாரா தான். அதாவது சினேகா, தந்தை விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்ததை பார்க்கும் பொழுது இந்த ஜோடி க்யூட்டாக இருக்கிறது என்று இவர்கள் வரும் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்து விட்டது. ஆனால் ஆரம்பத்தில் வெங்கட் பிரபு, சினேகாவிற்கு பதிலா நயன்தாராவை நடிக்க வைக்கலாம் என்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார்.

ஆனால் நயன்தாரா அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருந்ததால் கால்ஷீட் பிரச்சனையால் வெங்கட் பிரபு கேட்ட தேதியில் நடிக்க முடியாமல் போய்விட்டது. அதன் பிறகு தான் சினேகாவை தேர்வு செய்திருக்கிறார்கள். ஆனால் இவர்களுடைய காம்பினேஷனை பார்த்து ரசிகர்கள் மட்டுமல்லாமல் நயன்தாராவும் படத்தை பார்த்த பிறகு நல்ல வேலை நான் நடிக்கவில்லை.

ஏனென்றால் நான் நடித்தால் கூட இந்த அளவிற்கு இருக்காது சினேகா நடித்ததால் மட்டும்தான் விஜய் சினேகாவின் காட்சிகள் ரொம்பவே ரசிக்கும் படியாக அமைந்திருக்கிறது என்று பாராட்டி பேசி இருக்கிறார். இந்த விஷயத்தை வெங்கட் பிரபு சமீபத்தில் கொடுத்த பேட்டியில் போட்டு உடைத்திருக்கிறார்.

Trending News