செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

சர்ச்சையை தூக்கி குப்பையில் போட்ட சிவகார்த்திகேயன்.. அடுத்த 150 கோடி வசூலுக்கு அஸ்திவாரம் போட்ட SK 23, மிரட்டும் அப்டேட்

SK 23 Movie Update: சிவகார்த்திகேயனின் 23வது படத்தை இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்குகிறார். இந்த அறிவிப்பு ஏஆர் முருகதாஸின் பிறந்த நாள் அன்று வெளியானது. அதனை தொடர்ந்து இந்த படத்தில்முன்னணி பிரபலங்கள் 2 பேர் இப்போது இணைந்து எஸ்கே 23 படத்திற்கு மேலும் வலு சேர்த்து இருக்கின்றனர்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மிருணால் தாக்கூர் நடிக்கிறார். இந்த படம் ஒரு ஆக்ஷன் என்டர்டைன்மென்ட் ஆக உருவாக்க திட்டமிட்டுள்ளனர். ஆனால் சமீப காலமாகவே சிவகார்த்திகேயனுக்கு நேரம் சரியில்லை. சிவகார்த்திகேயன் வெற்றிக்கு துணையாய் இருந்த இசையமைப்பாளர் டி இமான், SK-வை குறித்து பரபரப்பான செய்தியை பேட்டி ஒன்றில் தெரிவித்து சந்தி சிரிக்க வைத்து விட்டார்.

ஆனால் அதற்கெல்லாம் இன்று வரை சிவகார்த்திகேயன் பதில் கொடுக்கவில்லை. டி இமான் சிவகார்த்திகேயன் மீது அவபெயரை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து கொளுத்தி போட்டுக் கொண்டிருக்கிறார். இவ்வளவு சர்ச்சைகளுக்கு மத்தியிலும் சிவகார்த்திகேயன் எதைப் பற்றியும் கண்டுகொள்ளாமல் தன்னுடைய காரியத்தில் தான் கண்ணாய் இருக்கிறார்.

எஸ்கே 23 படத்தில் இணைந்த 2 முன்னணி பிரபலங்கள்

எஸ்கே 23 படத்தில் இவருடன் இரண்டு முன்னணி பிரபலங்கள் இணைந்துள்ளனர். ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சூப்பர் ஹிட் ஆன துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்த வித்யூத் ஜம்வால், எஸ்கே 23 படத்தில் இணைந்திருக்கிறார். இவர் மட்டுமல்ல மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் சிவகார்த்திகேயனுடன் முதன் முதலாக எஸ்கே 23 படத்தில் கைகோர்த்து இருக்கிறார்.

இந்த படம் நிச்சயம் ஏஆர் முருகதாஸுக்கு கம்பேக் கொடுக்கும் என்று திரை உலகமே மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது. இந்தப் படத்தை பக்கா ஆக்சன் என்டர்டைன்மென்ட் படமாக சிவகார்த்திகேயன் நடிப்பில் எடுக்க திட்டமிட்டுள்ளனர். இதன் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாத இறுதியில் துவங்கப் போகின்றனர்.

இந்த படத்தின் பிரீ ப்ரோடுக்ஷன் வேலைகளை ஏற்கனவே ஏஆர் முருகதாஸ் தொடங்கிவிட்டார். விஜய்க்கு எப்படி துப்பாக்கி படம் ஒரு நல்ல திறப்பு முறையாக அமைந்ததோ, அதேபோல் சிவகார்த்திகேயனுக்கும் இந்த படம் ஒரு டர்னிங் பாயிண்டாக இருக்கும். அதுமட்டுமல்ல இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இந்த ரெண்டு பிரபலங்கள் இணைந்திருக்கும் மாஸான அறிவிப்பு தற்போது வெளியாகி எஸ்கே 23 படத்தைக் குறித்த எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கின்றனர்.

ஏற்கனவே டாக்டர், டான் போன்ற படங்களில் 100 கோடியை அள்ளிய சிவகார்த்திகேயன் எஸ்கே 23 படத்தில் நிச்சயம் 150 கோடி வசூலை தட்டி தூக்க வேண்டும் என்று, இந்த இரண்டு பிரபலங்களையும் படத்தில் இணைந்து அதற்கான அச்சாரத்தை போட்டு இருக்கிறார்.

Trending News