சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

காணமல் போன 2 இளம் சாக்லேட் பாய்ஸ்.. போராடிக் கொண்டிருக்கும் சசிகுமாரின் உடன்பிறப்பு

Actor Sasikumar : பொதுவாக ஒரு படங்களில் நடித்தாலே ரசிகர்களுக்கு பிடிக்கும் சில ஹீரோக்கள் சில படங்களில் காணாமல் போவதும் உண்டு. அவ்வாறு 90’s இளசுகளின் மனதை கவர்ந்த 2 ஹீரோக்கள் இப்போது என்ன செய்கிறார்கள் என்றே தெரியாத நிலையில் இருக்கிறார்கள்.

இந்த வகையில் நான் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் தான் சித்தார்த் வேணுகோபால். தமிழ் சினிமாவில் ஆனந்த தாண்டவம் படத்தில் மூலம் அறிமுகமானார். ஆனாலும் விஜய் ஆண்டனியின் படத்தில் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருந்தது. பிறகு அவரைப் பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை.

ஒரே படத்தில் மிகப்பெரிய பிரபலம் அடைந்த பின்பும் இப்போது அவர் என்ன செய்கிறார் என்பதே தெரியவில்லை. இதற்கு அடுத்தபடியாக ஆனந்த் நாக் என்ற நடிகர் ஒருவர் நேரம் படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் அமரகாவியம், பிரேமம் என பல படங்களில் நடித்திருந்தார்.

Also Read : 2023-ல் அதிக படம் நடித்த 5 ஹீரோக்கள்.. தோல்வியிலும் துவழாத விஜய் ஆண்டனி

ஆனால் வெற்றிவேல் என்ற படத்தில் சசிகுமாரின் சகோதரராக நடித்து மிகவும் பிரபலமடைந்தார். இப்போதும் அவர் ஒரு சில படங்களில் வந்தாலும் பெரிய அளவில் கவனம் கிடைக்கவில்லை. இப்போதும் துடிக்கும் கரங்கள், 800 மற்றும் ஆத்மிகா போன்ற படங்களில் நடித்து இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறார். இதேபோன்ற பல ஹீரோக்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பின் மூலம் அதன் பிறகு வளர முடியாமல் இருக்கின்றனர். அவர்கள் முகத்தையே ரசிகர்கள் மறக்கும் அளவிற்கு தான் அவர்களின் நிலைமை இருக்கிறது.

Also Read : திருமணத்திற்கு முன்பே அந்தரங்க உறவு தவறு இல்ல.. ஓப்பனாக போட்டுடைத்த சசிகுமார் பட குடும்ப குத்து விளக்கு

Trending News