மலையாளத்தில் பிரம்மாண்ட வெற்றி கண்ட திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்தை ரீமேக் செய்வதற்கான முயற்சிகள் போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கௌதமின் கதாபாத்திரத்தில் யார் நடிப்பது என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
இதற்காக மீனாவிடம் கால்சீட் கேட்டு உள்ள செய்தியும் வெளி வந்தது. ஆனால் தற்போது பாபநாசம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இரண்டாம் பாகம் எடுப்பதற்கான வாய்ப்பு இல்லை என்பது போன்ற காரணங்களை வெளியிட்டுள்ளார்.
கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்த கௌதமி இரண்டாம் பாகத்தில் இல்லை என்றால் திரைக்கதையில் பல மாற்றங்கள் இருக்கும், அப்படி திரைக்கதையில் மாற்றங்கள் இருக்கும் என்றால் சுவாரஸ்யமாக இருக்காது என்பதை கூறியுள்ளார்.
அதைத்தவிர கமலஹாசனுக்கு இரண்டாம் பாகம் என்பது ஏழரை சனி கண்டிப்பாக சாத்தியமில்லை என்பது போன்று கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். ஏற்கனவே இந்தியன் 2 படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு பல பிரச்சினைகளை சந்தித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கௌதமி நடிக்க வேண்டும் என்று என்னால் போய் கெஞ்சிக் கொண்டிருக்க முடியாது. அதுமட்டுமில்லாமல், இந்த கதாபாத்திரத்திற்காக வேறு நடிகையை போட்டாள் கதையில் நிறைய மாற்றங்கள் இருக்கும் அது உண்மையாகவும் இருக்காது என்பது போன்ற கமலஹாசனும் தெரிவித்துள்ளார்.
இந்த காரணங்களால் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் பிளானை விட்டு விடலாம் என்பது போன்று கமல் தரப்பிலும் கூறப்பட்டுள்ளதாம். இதனால் இரண்டாம் பாகம் உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை என்பதை கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். இந்தியன் 2 பிரச்சனை முடிந்த பின் அதன் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.