வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

80 வயதை தாண்டியும் நிஜ வாழ்க்கையில் பக்குவம் இல்லாத 2 பிரபலங்கள்.. ஊருக்கு உபதேசம் பண்ணும் குடும்பம்

2 tamil celebrities who are not mature even beyond the age of 80: வயதானவர்கள் சிலர் சிறியவர்கள் செய்யும் தவறை மன்னித்து பக்குவத்துடன் நடந்து தனது பெரிய மனுஷத்தனத்தை நிரூபிப்பார்கள் ஆனால் பெரியவர்கள் சிலரோ வயது ஏற ஏற குழந்தை மனசுக்கு மாறிவிடுவார்கள். தனக்கு இருக்கும் பக்குவத்தையும் மீறி கோபத்தை வெளிப்படுத்துவது அவர்களின் இயலாமையே.

தமிழ் சினிமாவில் மற்றும் நாடகங்களில் அரை நூற்றாண்டுக்கும் மேல் பயணித்த சூர்யாவின் தந்தை சிவக்குமார் அவர்கள் இன்னமும் தமிழ் பொதுக்கூட்டங்கள், நூல் வெளியீட்டு விழா போன்றவற்றில் கலந்து கொண்டு தமிழ் மீது அவருக்கு இருக்கும் அக்கறையில் அவரால் முடிந்ததை செய்து கொண்டு வருகிறார். 

82 என தனது வயதை ஒரு காரணம் காட்டாமல் இன்றைய இளைஞர்களின் நக்கல் நையாண்டிகளை கண்டு கொள்ளாமல் சேவையாற்றி வரும் அவரது மனபாங்குக்கு முதலில் தலை வணங்க வேண்டும். கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் என்பார்கள்,ஆனால் இந்த மனிதருக்கோ குணம் இருக்கும் இடத்தில் கோபம் இருக்கிறது அவ்வளவே!

Also read: செல்பி சிவகுமாரின் அடுத்த அநாகரிகமான செயல்.. பொது இடத்தில் காத்தோடு போன சூர்யாவின் மானம்

மேடை மீது ஏறி தனக்கு இருக்கும் தமிழ் புலமையையும் அற்புத நினைவுகளையும் மக்களுடன் பகிர்ந்து கைத்தட்டல் வாங்கும் இந்த  திரை உலக மார்க்கண்டேயனுக்கு, மனதிற்கு ஒப்பாத செயல் நடந்து விட்டால் அதை உடனடியாக வெளிப்படுத்தவும் தயங்குவதில்லை.  தற்போது சமீபத்தில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் தன்னை காண வந்த ரசிகனின் சால்வையை தூக்கி எறிந்து பலரின் கண்டனத்துக்கு ஆளானார் சிவக்குமார். 

சால்வை போர்த்துவது என்பது சிவகுமாருக்கு பிடிக்காத ஒன்றாம். அதை தெரிந்தும் சிவகுமாரின் நெருக்கத்திற்கு உரிய அந்த ரசிகர் சால்வை பொருத்த முற்பட்டது கோபத்தை ஏற்படுத்தியது. உடல் அசதி மற்றும் கோபத்தின் காரணமாக சால்வையை பிடித்து தூக்கி போட்டார்.  இதன்பின் அந்த ரசிகனை அழைத்து அமர வைத்து ஊடகத்தின் முன்பு மன்னிப்பும் கேட்டார் சிவக்குமார். உபதேசம் என்பது ஊருக்குத்தான் நமக்கு அல்ல என்று இருக்கும் இந்த பெரியவர்களை என்ன சொல்வது என்றே தெரியவில்லை

இதேபோல் 80 வயது நிறைவு செய்த இளையராஜாவும் பொது இடங்களில் மக்களோ, நட்சத்திரங்களோ சிறு தவறு செய்தாலும் அதை அந்த நேரத்தில் பெரிதுபடுத்தி கோபத்தில் கத்த தொடங்கி விடுவாராம்.பின்பு அதை உணர்ந்து  மனம் வருந்துவாராம். நடிகர் பார்த்திபனை மேடையில் வைத்து இசையைப் பற்றி உனக்கு என்ன தெரியும் என்று திட்டி விட்டு, பின்பு ஒரு நிகழ்ச்சியில் நீயும்  உங்களுக்கு என்ன தெரியும் என்று கேட்டிருக்கலாமே!  ஏன்னா எனக்கும் ஒன்னும் தெரியாது” என்று வெளிப்படையாக மனம் திறந்து பேசியதாக தகவல். 

Also read: பவதாரணியின் 80 லட்சத்தை ஆட்டைய போட்டுட்டான்.. தகாத வார்த்தையில் விளாசிய இளையராஜாவின் ரத்த சொந்தம்

Trending News