2 Tamil films coming to give proper competition to Malayalam cinema: இன்றைய சூழலில் தங்களுக்கு உரியது என்று கட்டுக்குள் இல்லாமல் மொழியைக் கடந்து பான் இந்தியா மூவியாக வெளிவருவதால் அனைத்து மொழி ரசிகர்களும் கொண்டாடும் துறையாகவே சினிமா மாறி உள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளிவந்த தமிழ் படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் போகவே தமிழ் ரசிகர்களின் கவனங்கள் மலையாள சினிமாவை நோக்கி பாய்ந்தது.
மலையாளத்தில் உருவாக்கப்பட்டு தமிழில் மொழிமாற்றம் செய்து ரிலீஸ் ஆன, மஞ்சுமல் பாய்ஸ், பிரேமலு, ஆடு ஜீவிதம் போன்ற படங்கள் நேர்மறையான விமர்சனங்களுடன் வசூலிலும் தன்னிறைவை அடைந்தது.
நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பது போல், தற்போது இரண்டு முதல் தரமான, கதை களத்துடன் கூடிய படங்கள் தமிழில் ரிலீஸ் ஆக உள்ளன.
மனுஷி: வெற்றிமாறனின் கிராஸ் ரூட் தயாரிப்பில் அறம் படம் புகழ் கோபி நயினாரின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகி உள்ளது மனுஷி. படத்தின் டிரைலரிலேயே வசனங்களால் சாட்டையடி கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
இளையராஜாவின் இசையில், விசாரணை படத்தின் சாயலில் ஆண்ட்ரியா “சிறை கம்பிகளுக்கு இடையே கொடுமைப்படுத்தப்படுவதும்”, “நாங்கள் விரும்பும் பதில் வரும் வரை விசாரிக்க வேண்டும்” என்று காவல்துறை கூறுவதும் உச்சகட்ட காட்சிகளாக அமைந்துள்ளது.
ஆணாதிக்கத்தனம், சாதி மத பாகுபாடுகள், அரசியலின் ஆதிக்கம் என சமூகத்திற்கு எதிரான அத்தனைக்கும் பதிலடி கொடுக்கும் வண்ணம் முற்போக்கான சிந்தனையுடன் களம் இறங்க உள்ளார் இந்த மனுஷி.
ட்ரைலரிலேயே தெறிக்க விட்ட சீயான் விக்ரமின் வீரதீரசூரன்
வீரதீர சூரன்: ஏப்ரல் 17 அன்று சீயான் விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு சியான் 62 படத்தின் தலைப்பு வீரதீரசூரன் அறிவிக்கப்பட்டது. இதில் மூன்று நிமிடம் ஒளிபரப்பான காட்சிகள் மொத்த கதைக்கான ஹைப்பையும் எகிற விட்டது எனலாம்.
மஞ்சள் நிற ஒளியில் சியான் விக்ரம் அதிரடி ஆக்சன் கிங்காக களமிறங்கி எதிராளியினரை வேட்டையாடும் காட்சிகள் தத்ரூபமாக அமைந்து எதிர்பார்ப்பை கூட்டி உள்ளது.
தனி ஒரு நாயகனாக தொடர் தோல்விகளால் துவண்டு கொண்டிருந்த விக்ரமிற்கு கண்டிப்பாக இது ஒரு கம்பேக்காக அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.