சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

தேசிய விருது மறுக்கப்பட்ட 2 படங்கள்.. சூரரைப் போற்று அளவிற்கு பேசப்பட்ட தரமான கதை

சினிமாவில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த நடிகர், நடிகை, சிறந்த படம் என பல்வேறு பிரிவுகளின் கீழ் தேசிய விருது வழங்கப்பட்டு கொண்டு இருக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான 68 வது தேசிய விருது பட்டியல் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

நல்ல கதையம்சம் கொண்ட படங்களை சேர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் சூர்யா நடிப்பில் 2020 ஆம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளை இந்த ஒரு படம் மட்டுமே தட்டிச் சென்றுள்ளது.

இதில் சிறந்த இயக்குனருக்கான விருது சுதா கொங்கராவிற்கும், சிறந்த நடிகருக்கான தேசிய விருது சூர்யாவிற்கும், சிறந்த நடிகைக்கான தேசிய விருது அபர்ணா பாலமுரளிக்கும்,  சிறந்த பின்னணி இசைக்கான விருது ஜிவி பிரகாஷ்க்கும், சிறந்த படத்திற்கான விருது என ஆகமொத்தம் 5 நேஷனல் விருது இந்தப் படத்திற்கு கிடைத்திருக்கிறது.

சூரரை போற்று படம் 5 தேசிய விருதுகளை வாரிக் குவித்தால் சூர்யா அண்ட் கோ மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறது. ஆனால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று கதையிலும் எல்லோரையும் கவர்ந்த இரண்டு படங்களுக்கு தேசிய விருது வழங்கப்படவில்லை. இது மக்கள் மத்தியில் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது

க/பெ ரண சிங்கம்: விருமாண்டி இயக்கத்தின் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதில் வெளிநாட்டுக்கு சென்ற கணவர் இறந்த பிறகு, அவரது உடலை பெறுவதற்காக போராடும் மனைவியின் போராட்டம் தான் இந்த படத்தின் கதை.

இந்த படத்திற்கு டைம்ஸ் ஆப் இந்தியா 5 நட்சத்திரங்களில் மூன்று மதிப்பீட்டைக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. எனவே நிச்சயம் இந்தப் படம் தேசிய விருதைப் பெரும் என நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் இதற்கு விருது கிடைக்காமல் போனது.

தேள்: ஹரிகுமார் இயக்கத்தில் பிரபுதேவா, சம்யுக்தா ஹெக்டே நடித்த இந்தப் படம், கொரியன் மொழியில் 10 வருடங்களுக்கு முன்பு 2012-ல் வெளியான பீட்டா (Pieta) என்ற படத்தை தழுவி உருவாக்கப்பட்டது. இதில் அன்பு கொடுத்து அதை திரும்பி எடுத்தால் அதன் வலி எப்படி இருக்கும் என்பதை அம்மா பாசத்துடன் கொஞ்சம் அழுத்தமாக கூறி ரசிகர்களையும் கவர்ந்தது.

எனவே இதன் அடிப்படையில் நிச்சயம் இந்த படத்திற்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் படக்குழுவிற்கு ஏமாற்றம் மட்டுமே மிச்சம். இந்த இரண்டு படங்களுக்கு தேசிய விருது கிடைக்கவில்லை என்பது எல்லோருக்கும் வருத்தம்தான்.

Trending News