மாநாடு படத்துடன் மோதிய மற்றுமொரு டைம் லூப் படம்.. என்ன நிலைமை ஆச்சு தெரியுமா.?

ஒரே சமயத்தில் பல படங்கள் வெளியானால் பிரச்சனை தான். அதிலும் ஒரு படம் நன்றாக இருந்து விட்டால் மற்ற படங்களுக்கு வசூல் ரீதாயான பிரச்சனை உண்டாகும். வெவ்வேறு கதையம்சங்கள் கொண்ட படங்கள் ஒரே சமயத்தில் வெளியானாலே இவ்வளவு பிரச்சனை உள்ள நிலையில் ஒரே கதையம்சம் கொண்ட படங்கள் ஒரே சமயத்தில் வெளியானால் சொல்லவா வேண்டும்.

அப்படி ஒரே கதையம்சத்தில் சமீபத்தில் வெளியான படங்கள் தான் ஜாங்கோ மற்றும் மாநாடு. இந்த இரண்டு படங்களுமே டைம் லூப் அடிப்படையில் தான் உருவாகி இருந்தன. ஆனால் மாநாடு படத்தை நாடே கொன்டாடி வருகிறது. ஜாங்கோ படம் வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை.

இரண்டுமே ஒரே கான்செப்ட் தானே அப்படி இருக்கும்போது மாநாடு வெற்றி பெற்று ஜாங்கோ தோல்வி அடைந்தது ஏன் என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. அதாவது டைம் லூப் அல்லது டைம் மிஷின் போன்ற சயின்ஸ் பிக்சன் கதைகளை இயக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ரசிகர்களுக்கு புரியும்படி எளிமையாக இருந்தால் தான் படத்திற்கு வரவேற்பு கிடைக்கும்.

அந்த வகையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படம் ரசிகர்களுக்கு எளிதில் புரியும்படி அமைந்திருந்ததாம். அதனால் ரசிகர்கள் இந்த படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு அளித்து மாபெரும் வெற்றி படமாக மாற்றி விட்டார்கள்.

ஆனால் ஜாங்கோ படம் அப்படி அல்ல. டைம் லூப் கான்செப்ட்டில் ஏலியனை வைத்து கதைகளத்தை சற்று சிக்கலாக உருவாக்கி இருக்கிறார்கள். அதாவது படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு படத்தின் கதை குழப்பத்தை அளிக்கும் விதமாக இருந்ததால் ஜாங்கோ படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.

முன்னதாக டைம் மிஷின் அடிப்படையில் வெளியான 24, நேற்று இன்று நாளை போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. காரணம் என்னதான் சயின்ஸ் பிக்சன் படமாக இருந்தாலும் அதில் உள்ள நுணுக்கங்களை பார்வையாளர்கள் எளிதில் புரியும்படி இருந்தாலே போதும். சரியான கதையை தேர்வு செய்த போதும் இயக்கத்தில் சொதப்பியதால் இந்தியாவின் முதல் டைம் லூப் படமான ஜாங்கோ படம் வந்த சுவடு தெரியாமல் போய்விட்டது.