ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

போட்டியில்லாமல் டாப் ரேங்கில் இருக்கும் நயன்தாரா, சமந்தா.. காணாமல் போன 5 இளம் நடிகைகள்

சினிமாவில் ஒரு ஹீரோ எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவர் ஹீரோவாகவே நடிக்கலாம். ஆனால் ஹீரோயின்கள் அப்படி அல்ல. உதாரணமாக ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் தற்போது வரை ஹீரோவாக நடித்து வருகிறார்கள். அவர்களுடன் நடித்த ஸ்ரீபிரியா போன்ற நடிகைகள் இருக்கும் இடமே தெரியாத அளவிற்கு காணாமல் போய்விட்டனர்.

அவர்கள் மட்டுமல்ல அடுத்தடுத்த தலைமுறைகளிலும் இதே நிலை தான் தொடர்கிறது. ஆனால் இதில் இரண்டு நடிகைகள் மட்டும் பல ஆண்டுகளாக தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகைகளாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். ஒன்று நயன்தாரா மற்றொன்று சமந்தா. இவர்கள் இருவருக்கும் மார்க்கெட் உச்சத்தில் உள்ளது. அதுமட்டுமின்றி இருவருமே எப்போதும் கைவசம் நிறைய படங்களை வைத்துள்ளனர்.

மேலும் தொடர்ந்து பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. இவர்களுக்கு மட்டும் தான் இந்த நிலை. ஆனால் இவர்களுடன் இணைந்து திரைப்பயணத்தை தொடங்கிய கீர்த்தி சுரேஷ், ஹன்சிகா, மடோனா செபாஸ்டியன், ரகுல் ப்ரீத் சிங், ராஷி கண்ணா போன்ற நடிகைகளை சமீபகாலமாக எந்தவொரு படங்களிலும் பார்க்க முடியவில்லை.

அப்படியே இருந்தாலும் ஒன்று அல்லது இரண்டு படங்கள் தான் கைவசம் வைத்துள்ளனர். ஆனால் நயன்தாரா மற்றும் சமந்தா அப்படி அல்ல இருவருக்கும் தொடர்ந்து ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அதோடு இருவரும் பல ஆண்டுகளாக டாப் நடிகைகளாக உள்ளனர். தற்போது வரை போட்டிக்கு யாரும் இல்லாமல் இருவர் மட்டும் தென்னிந்திய சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.

ஒரு நடிகை இத்தனை ஆண்டுகள் சினிமாவில் நிலைத்து இருப்பது அதுவும் டாப் நடிகையாக நிலைத்து இருப்பது சாதாரண விஷயமல்ல. ஆனால் இவர்கள் இருவரும் இருக்கிறார்கள் என்றால் அவர்களிடம் அந்த அளவிற்கு திறமை உள்ளதென்று அர்த்தம். வயதானால் ரசிகர்கள் அந்த நடிகையை ஏற்க மாட்டார்கள். ஆனால் நயன்தாரா விஷயத்தில் இது அப்படியே எதிர்மறையாக நடக்கிறது.

வயது அதிகமாக அதிகமாக தான் நயன்தாராவின் மார்க்கெட் அதிகரித்து வருகிறது. அதுவும் ஹீரோக்களுக்கு இணையான சோலோ நாயகி சப்ஜெக்ட் படங்கள் தான் நயன்தாராவிற்கு அதிகமாக வருகிறது. அதேபோல் சமந்தாவும் நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களை தான் தேர்வு செய்து நடித்து வருகிறார். இளம் நடிகைகளே மார்க்கெட் இழந்து தவிக்கும் நிலையில் இவர்கள் நிலைத்து நிற்பது ஆச்சரியமான விஷயம் தான்.

Trending News