செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

பிக்பாஸில் தாக்கு பிடிக்க முடியாத 2 போட்டியாளர்கள்.. வெளியேறப் போறது உறுதி, இதுதான் காரணம்

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 6 விஜய் டிவியில் அக்டோபர் 9 ஆம் தேதி முதல் துவங்கி உள்ளது. இந்த வாரம் இறுதி நாட்களில் எலிமினேஷன் நடைபெறுவதற்கான நாமினேஷன் லிஸ்ட் தயாராகியுள்ளது.

கடந்த சீசனில் விட இந்த முறை அதிக போட்டியாளர்களை களமிறக்கிய பிக் பாஸ், தொடக்கத்திலேயே 20 போட்டியாளர்களுடன் வீட்டையே கலகலப்பாக்கிய உள்ளார். இதனால் கன்டென்டுக்கும் ரணகளத்துக்கும் பஞ்சமில்லாமல் நாள்தோறும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து கொண்டிருக்கின்றது.

Also Read: வைல்ட் கார்டு என்ட்ரியாகும் ஆண்ட்டி நடிகை.. ஒரு நாள் சம்பளத்தை கேட்டு வாயை பிளக்கும் முன்னணி நடிகைகள்

அதில் ஒரு வாரம் கூட தாக்குப் பிடிக்காமல் 2 போட்டியாளர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு என்ன காரணம் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது. பிக்பாஸ் வீட்டில் முதல் நாளில் இருந்தே ரவுடி பேபியாக வலம் வரும் சீரியல் நடிகை ஆயிஷா மூச்சுத்திணறல் காரணமாக சீசன் 6ல் இருந்து தாமாகவே வெளியேறி இருக்கிறார்.

அவரைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த போட்டியாளரான பத்திரிக்கையாளர் விக்ரமன், இரண்டாவது ஆளாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி உள்ளார். இவருக்கு திடீரென்று உடல்நிலை குறைவு ஏற்பட்டதால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி உள்ளார்.

Also Read: பிக்பாஸ் சீசன்-6 முதல் பைனலிஸ்ட் இவர் தான்.. கொண்டாடும் சோசியல் மீடியா

தந்தி தொலைக்காட்சியில் முன்னணி பத்திரிகையாளராக இருந்த இவர், தன்னுடைய சொல்லும் செயலும் ஒரே மாதிரியாக இருக்கும் என்பதை ரசிகர்களுக்கு காட்ட வேண்டும் என்று குறிக்கோளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்தார்.

இவர் அடுத்த ஆரி அர்ஜுனன் ஆக நேர்மையின் விதிவிலக்காக இந்த சீசனின் டைட்டில் வின்னர் ஆகவும் அதிக வாய்ப்பு இருக்கும் நபர் என்று ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த நிலையில், இவர் வெளியேறி இருப்பது பலரையும் ஏமாற்றம் அடைய வைத்திருக்கிறது. மேலும் இந்த சீசன் துவங்கி ஒரு வாரம் மட்டுமே நிறைவடைந்ததால் மீதி இருக்கும் 18 போட்டியாளர்களில் யாரும் எலிமினேட் ஆகாமல் சேவ் ஆகியுள்ளனர்.

Also Read: பிக்பாஸில் 20 போட்டியாளர்களுக்கும் தெரிந்த ஒரே முகம்.. ஓவர் நைட்டில் ட்ரெண்டான சம்பவம்

Trending News