திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஜிபி முத்துவுக்கு ஜோடியாகும் 2 பெண்கள்.. வயிற்றெரிச்சலில் இருக்கும் ஆண் போட்டியாளர்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு வாரத்தை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறுகளில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் இந்த வாரம் வேற லெவலில் அட்ராசிட்டி பண்ணியிருந்தார்.

அதிலும் ஜி பி முத்துவை அவர் கலாய்த்தது, போட்டியாளர்களின் நிறை, குறைகளை மனம் கோணாதவாறு கூறியது என்று பிக் பாஸ் நிகழ்ச்சி பயங்கர சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது. மற்ற போட்டியாளர்கள் அனைவரும் ஆண்டவரை பார்த்து கொஞ்சம் பயந்து பயந்து பேசும் பொழுது ஜிபி முத்து மட்டும் மிகவும் இயல்பாக பேசுவது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

அந்த வகையில் நேற்று ஜி பி முத்துவுக்கு பிக் பாஸ் ஒரு பெரிய தபால் பெட்டியை அனுப்பி இருந்தார். அதில் ரசிகர்கள் அவருக்கு அனுப்பிய ஏராளமான கடிதங்கள் இருந்தது. அவ்வளவையும் படிக்க முடியாததால் ஒரு சில கடிதங்கள் மட்டும் நேற்று படிக்கப்பட்டது. அதில் ஒரு கடிதத்தில் ஜிபி முத்து வெளியில் வந்தவுடன் ஹீரோவாக நடிக்க போகிறார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Also read:மக்களை அதிகம் கவர்ந்த 5 பிக் பாஸ் போட்டியாளர்கள்.. முதலிடத்தை பிடித்த தலைவர் ஜிபி முத்து

மேலும் அதில் அவருக்கு இரண்டு ஹீரோயின்கள் என்றும் நீங்கள் யாரை செலக்ட் செய்வீர்கள் என்றும் கேள்வி கேட்கப்பட்டிருந்தது. இப்படி ஒரு விஷயத்தை எதிர்பார்க்காத ஜி பி முத்து அதிர்ந்து தான் போனார். இருப்பினும் நயன்தாரா மற்றும் சிம்ரன் பெயர்களை அவர் கூறினார். இதற்கு போட்டியாளர்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் பலத்த கரவொலியை எழுப்பினர்.

அதன் பிறகு கமல் வீட்டில் உள்ள பெண்களில் யாரை ஹீரோயின்களாக தேர்ந்தெடுப்பீர்கள் என்று கேட்டார். உடனே ஜி பி முத்து அதற்கு சமாளிப்பாக இங்கு இருக்கும் அனைவரும் எனக்கு அக்கா தங்கச்சி என்று கூறினார். ஆனாலும் கமல் சும்மா கூறுங்கள் என்று உசுப்பேத்தி விட்டார். அதனால் ஜிபி முத்து ரட்சிதா மற்றும் ஜனனியின் பெயரை கூறினார்.

Also read:யூடியூபால் ஜிபி முத்துவுக்கு கிடைத்த மறுவாழ்வு.. மாத வருமானம் எவ்வளவு தெரியுமா?

ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் ராபர்ட் மாஸ்டர், அசல் என்று ரக்ஷிதாவை பார்த்து ஜொள்ளு ஊற்றி வருகின்றனர். இந்நிலையில் ஜி பி முத்துவும் அவருடைய பெயரை கூறியிருப்பது சக போட்டியாளர்களை கொஞ்சம் பொறாமை பட வைத்திருக்கிறது. மேலும் ஜனனி ஜி பி முத்துவிடமிருந்து இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்கவில்லை என்று அவருடைய முகத்திலேயே தெரிகிறது.

ரக்ஷிதா போல் சமாளிப்பாக சிரிக்க முடியாத ஜனனி வெளிப்படையாகவே தன் அதிர்ச்சியை காட்டினார். இவ்வாறு நேற்றைய எபிசோடில் ஜிபி முத்து மட்டும் தான் ஸ்கோர் செய்தார். ஆண்டவர் கூட ஜிபி முத்துவிடம் இயல்பாக பேசுவதும், கலாய்ப்பதும் என்று இருப்பது சக ஆண் போட்டியாளர்களை கொஞ்சம் வயிற்று எரிச்சல் பட வைத்திருக்கிறது. இப்படி ஜிபி முத்துவுக்கு வெளியில் அதிக சப்போர்ட் இருப்பதை தெரிந்து கொண்ட போட்டியாளர்கள் அடுத்தடுத்த வாரங்களில் எப்படிப்பட்ட எதிர்வினையை கொடுக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also read:கமலுடன் போட்டி போடும் ஜி பி முத்து.. டாப் ஹீரோயின்களுக்கு போடும் ஸ்கெட்ச்

Trending News