ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

நல்ல நடிப்பு திறமை இருந்தும் வெற்றிக்காக போராடும் 2 ஹீரோக்கள்.. விஷாலுக்கு டஃப் கொடுக்கும் நடிகர்

Actor Vishaal: சினிமாவை பொறுத்த வரைக்கும் வெற்றி, தோல்வி என்பதை யாராலும் அவ்வளவு எளிதாக கணித்து விட முடியாது. பல வருடங்கள் சினிமாவில் இருந்தும் வெற்றி பெற முடியாமல் தவிக்கும் நடிகர்களும் இருக்கிறார்கள். ஒரு படத்திலேயே ஒட்டுமொத்த பெயரையும் புகழையும் வாங்கும் நடிகர்களும் இருக்கிறார்கள். இதற்கு கடின உழைப்பையும் தாண்டி அதிர்ஷ்டம் என்பது ரொம்பவும் முக்கியமாக இருக்கிறது.

ஒரு சில நடிகர்களிடம் ஒரு ஹீரோவுக்கான எல்லா தகுதியும் இருக்கும். கிடைக்கும் வாய்ப்புகளிலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள். இருந்தாலும் அவர்கள் நினைத்த வெற்றியை பெற முடியாமல் தவித்துக் கொண்டே இருப்பார்கள் எதனால் இந்த ஹீரோக்களால் ஜெயிக்க முடியவில்லை என்று ரசிகர்களே குழம்பிப் போய்விடுவார்கள். அந்த லிஸ்டில் இருப்பவர்கள் தான் இந்த ரெண்டு ஹீரோக்கள்.

Also Read:விஜய்யை ஒரு ஐட்டம் ஹீரோவாக காட்டியதுக்கு இவர் தான் முக்கிய காரணம்.. முகம் சுளிக்க வைத்த 5 கவர்ச்சி ஆட்டம்

இந்த லிஸ்டில் முதலில் இருக்கும் ஹீரோதான் அருள்நிதி. வம்சம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான இவர் தன்னுடைய முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். கிட்டதட்ட இவர் சினிமாவுக்குள் நுழைந்து பத்து வருடங்களுக்கு மேலாகியும், கதை தேர்வில் ரொம்பவும் கவனமாக இருப்பதால் குறைந்த எண்ணிக்கையிலேயே படங்களை கொடுத்திருக்கிறார்.

நல்ல உயரமும், வாட்டசாட்டமான உடல் அமைப்பு கொண்ட இவர் ஆக்சன் காட்சிகளில் நடிகர் விஷாலுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு நடித்து இருப்பார். அதேபோன்று நிறைய திகில் படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க கூடிய நடிகர் இவர். வருடத்திற்கு ஒரு படம் என்று கொடுத்தாலும் ரசிகர்களிடம் பாசிட்டிவ் விமர்சனங்களை மட்டுமே பெற்று வரும் இவர் இன்றுவரை சினிமாவில் முன்னணி ஹீரோவாக வரவில்லை.

Also Read:நடிப்பு அரக்கனாய் மிரட்டிக் கொண்டிருக்கும் ஏஜென்ட் அமர்.. மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய 6 படங்கள்

அருள் நிதியைப் போலவே வெற்றிக்காக தவித்துக் கொண்டிருக்கும் மற்றொரு ஹீரோ தான் கதிர். மதயானை கூட்டம் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் இவர். முதல் படத்தில் இவருடைய நடிப்பு சினிமா ரசிகர்களால் கவனிக்கும் வகையில் இருந்தது. அதைத் தொடர்ந்து கதிர் நடித்த திரைப்படம் தான் பரியேறும் பெருமாள்.

மாரி செல்வராஜின் இயக்கத்தில் வெளியான இந்த பரியேறும் பெருமாள் திரைப்படம் எத்தனை வருடங்கள் சென்றாலும் கதிரின் சிறந்த நடிப்பிற்கு ஒரு அடையாளமாக பார்க்கப்படும். ஹீரோவாக இருக்கட்டும் அல்லது சப்போர்ட்டிங் கேரக்டராக இருக்கட்டும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க கூடிய நடிகர் இவர். நடிப்புக்காக பாராட்டப்பட்டாலும் இன்றுவரை சினிமாவில் இவரால் ஜொலிக்க முடியவில்லை.

Also Read:Maamannan Movie Review- வடிவேலு என்னும் நடிகனை அடையாளப்படுத்திய மாரி செல்வராஜ்.. மாமன்னன் எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

Trending News