திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பூஜையே போடல அதுக்குள்ள ஆரம்பித்த பஞ்சாயத்து.. 200 கோடியால் விஜய்க்கு கிளம்பிய சிக்கல்

Actor Vijay: விஜய் பற்றிய எந்த செய்தி வந்தாலும் அது பரபரப்பாக தான் இருக்கும். அதிலும் அண்மை காலமாகவே இவர் குறித்து வெளிவரும் செய்திகள் மீடியாக்களுக்கு சரியான தீனி போட்டு கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது அவர் தன்னுடைய சம்பளத்தை 200 கோடியாக மாற்றி இருப்பது ஒரு சிக்கலுக்கு வழி வகுத்திருக்கிறது.

அதாவது அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் லியோ படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக வெங்கட் பிரபுவுடன் கூட்டணி அமைக்க இருக்கிறார். இது குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்த நிலையில் இப்படத்திற்காக விஜய்க்கு 200 கோடி சம்பளம் பேசப்பட்டு இருப்பது கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து பல விமர்சனங்களும் எழுந்து கொண்டிருக்கிறது.

Also read: வாய்ப்புக்காக செண்டிமெண்டாக உருட்டும் இயக்குனர்.. செத்தால் லோகேஷ் படத்துல தான் சாவாராம்

அதாவது விஜய்க்கு மட்டுமே தயாரிப்பாளர் இவ்வளவு சம்பளம் கொடுக்கிறார் என்றால் படத்தின் பட்ஜெட் எவ்வளவு இருக்கும். அப்படி என்றால் போட்ட காசை எடுப்பதற்கு அவர்கள் சில யுக்திகளையும் யோசித்து வைத்திருக்க வேண்டும். அந்த வகையில் படம் ரிலீஸ் ஆகும் போது டிக்கெட் விலையை அதிகப்படுத்தி லாபம் பார்த்து விடலாம் என்ற முடிவில் தயாரிப்பு தரப்பு இருப்பதாக ஒரு சந்தேகம் இப்போது எழுந்துள்ளது.

பொதுவாகவே பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும்போது டிக்கெட் விலை தாறுமாறாக உயர்த்தப்படும். அப்படி ஒரு எண்ணத்தில் தான் விஜய்க்கு இவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டிருப்பதாக பலரும் ஆதங்கத்தோடு பேசி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்த ஒரு பொது நல வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் போடப்பட்டிருக்கிறது.

Also read: மாஸ் என்ட்ரியால் கதி கலங்கும் பெரும்புள்ளிகள்.. நியூ லுக்கில் நீலாங்கரையை வட்டமிட்ட தளபதி விஜய்

அதில் கூறப்பட்டிருப்பதாவது, நடிகர்களுக்கான சம்பளம் கொடுப்பது அவர்களுடைய விருப்பம். ஆனால் டிக்கெட் விலையை உயர்த்தி ரசிகர்களை கஷ்டப்படுத்தக் கூடாது. அப்படி இருந்தால் எங்கள் மீது வழக்கு தொடரலாம் என பட குழு நீதிமன்றத்தில் உத்தரவாதம் கொடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் படத்தை வெளியிட கூடாது என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதுதான் தற்போது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எப்போதுமே ஒரு படம் பூஜை போட்டு ஆரம்பித்த பிறகு தான் ஏதாவது ஒரு சிக்கல் வரும். ஆனால் தளபதி 68 ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பே பல சர்ச்சைகளை சந்தித்து கொண்டிருக்கிறது. ஒரு வகையில் இது படத்திற்கான இலவச ப்ரமோஷனாகவும் மாறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Also read: அசுரன் பட சிவசாமியாக மாறிய தளபதி விஜய்.. மேடையில் அசர வைத்த வசனம்

Trending News