ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

2000 கோடி பட்ஜெட், ஆனாலும் ஷங்கர் படம் வேண்டாம்.. கண்டிஷனை பார்த்து தெறித்து ஓடிய ஹீரோக்கள்

இந்திய சினிமாவில் தற்போது வரலாற்று சிறப்புமிக்க படங்கள் எடுப்பது அதிகரித்து வருகிறது. இதற்கெல்லாம் காரணம் ராஜமௌலியின் பாகுபலி படம் வந்து வெற்றி பெற்றதன் விளைவு அடுத்தடுத்து அது மாதிரி படங்கள் இயக்குவது இயக்குனர்களிடம் ஆர்வத்தை தூண்டியுள்ளது. அதன் விளைவாக தமிழில் பொன்னியின் செல்வன் படத்தை எடுத்து வெற்றி பெற்றார் மணிரத்தினம்.

ஆனால் தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இது மாதிரி படங்களை எடுத்தால் மிக சிறப்பாக அமையும் என்று நினைத்த தருணத்தில் ஷங்கர் வேல்பாரி படத்தை எடுக்க முடிவு செய்தார். இந்த படத்திற்கான பட்ஜெட் 1000 கோடி என்று கூறப்பட்டது. இந்த படத்தில் முதலில் கே.ஜி.எஃப் ஹீரோ யஸ் நடிக்கப்போகிறார் இன்று கேள்விப்பட்டபோது தமிழர்கள் ஏன் தமிழ்நாட்டில் வேறு ஹீரோக்கள் இல்லையா என்று கேள்வி கேட்டு வந்தனர்.

Also Read : அதிரடி அவதாரத்தில் இருக்கும் இயக்குனர் ஷங்கர்.. ஆடிப்போன ஆண்டவர்!

ஷங்கர் உடனே சூர்யாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை பான் இந்தியா மூவியாக எடுப்பதால் ஹிந்தி நடிகர் ரன்வீர் சிங்கிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் ஆனால் ஷங்கருக்கு தமிழ் முகம் கொண்ட நடிகர் வேண்டுமென்று கூறிவிட்டார். இப்போது சூர்யா பெயர் மட்டுமே அடிபடுகிறது.வேறு பெரிய ஹீரோக்கள் நடிக்க தயக்கம் காட்டி வருகின்றனர்.

காரணம் இந்த படத்தில் நடிக்க ஷங்கர் ஐந்து வருட கால்ஷீட் கேட்கிறார். இந்த படம் 3 பாகங்களாக வெளி வருகிறது. ஒவ்வொரு பாகத்திற்கும் 700 கோடி பட்ஜெட் மொத்தம் 2100 பட்ஜெட் செலவாகிறது. இந்த மாதிரி செலவு செய்து எடுக்கும் முதல் படம் இந்தியாவில் இதுதான். இந்த ஒரு படத்திற்காக பெரிய ஹீரோக்கள் 5வருட கால்ஷீட் கொடுத்தால் சினிமா வாழ்க்கையே மாறிவிடும் என்ற பயம்.

Also Read : பட்ஜெட்டில் பாதியை ஆட்டையை போடும் ஷங்கர்.. பகிர் கிளப்பிய பிரபலம்

அதனால் இப்பொழுது சங்கர் சூர்யா பெயர் மட்டும் சொல்லியிருக்கிறார் மீதி தமிழ் முகத்திற்கு பெரிய நடிகர்களை எப்படி ஒத்துக் கொள்ள வைக்கப் போகிறார் என்று தெரியவில்லை. எப்படியோ தமிழ் ரசிகர்கள் ஆசைப்பட்டபடி தமிழ் நடிகர்கள் மட்டுமே நடிப்பார்கள் என்ற ஒரு செய்தி ஒருவிதத்தில் மகிழ்ச்சியை அளிக்கிறது.

ஆனால் இந்த படத்திற்கான 2100 கோடி பட்ஜெட் எப்படி சாத்தியமாகும் என்பது வியப்பாக இருக்கிறது. இந்த படத்தை பற்றி இப்பொழுதே பல செய்திகள் பரபரப்பாக வர தொடங்கியுள்ளது. இந்தியன் 2 வெளிவந்த பிறகு இதற்கான அறிவிப்பு அதிகமாக வரும் உறுதி செய்யப்படும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Also Read : 3 தரமான இயக்குனர்களை களமிறக்கும் ஷங்கர்.. கமலால் வந்த பிரச்சனையை சமாளிக்க இப்படி ஒரு திட்டம்

Trending News