புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

ரொம்ப சீக்கிரம் வெளியான 2015 திரைப்பட விருது.. அதிக அளவு விருதுகளை தட்டி தூக்கிய 2 படங்கள்

Tamilnadu State Awards 2015: சிறந்த திரைப்படங்களுக்கான விருது தொகுப்பை தமிழக அரசு நேற்று அதிரடியாக அறிவித்திருந்தது. எல்லாமே போன வருஷம் ரிலீஸ் ஆன படங்களுக்கான விருதாக இருக்கும் என்று பார்த்தால், நேற்று வெளியானது 2015 ஆம் ஆண்டுக்கான மாநில விருது பட்டியல். என்னப்பா இவ்வளவு சீக்கிரம் விருது கொடுக்குறீங்க என்று ஒரு பக்கம் நெட்டிசன்கள் கலாய்த்து தள்ள, மறுப்பக்கம் லேட்டா கொடுத்தாலும் வொர்த்தாக கொடுத்திருக்காங்க பா என்று பாராட்டியும் வருகிறார்கள்.

தமிழக அரசு சார்பில் சினிமா துறைக்கு கொடுக்கப்பட வேண்டிய விருதுகள் கடந்த பத்து வருடங்களாக ஒரு சில காரணங்களால் கொடுக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த வருடம் 2011 முதல் 2014 ஆம் ஆண்டுக்கான விருதுகள் மொத்தமாக வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2015 ஆம் ஆண்டுக்கான சிறந்த படங்களுக்கான விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

2015 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன படங்களில் சிறந்த திரைப்படத்திற்கான முதல் பரிசை தனி ஒருவன் படம் பெற்று இருக்கிறது அதைத் தொடர்ந்து. இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களை பசங்க 2 மற்றும் பிரபா படங்கள் வரிசையாக பேசி இருக்கின்றன. சிறந்த படத்திற்கான சிறப்பு பரிசு கேட்டகிரியில் இறுதிச்சுற்று மற்றும் 36 வயதினிலே படங்கள் விருதுகளை பெற்றிருக்கின்றன.

Also Read: ஜெயம் ரவிக்கு தலைவலியாய் மாறிய அண்ணன்.. அரவிந்த் சாமியால் சிக்கலில் தனி ஒருவன் 2

2015 ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகர் பரிசை இறுதிச்சுற்று படத்திற்காக மாதவன் பெற்றிருக்கிறார். அதேபோன்று சிறந்த நடிகைக்கான விருதை 36 வயதினிலே படத்திற்காக ஜோதிகா பெற்றிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் சிறந்த நடிகருக்கான சிறப்பு பரிசு, வை ராஜா வை படத்திற்காக நடிகர் கௌதம் கார்த்திக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. சிறந்த நடிகைக்கான சிறப்பு பரிசு இறுதிச்சுற்று படத்தில் நடித்த ரித்திகா சிங்கிற்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

2015 ஆம் ஆண்டிற்கான சிறந்த வில்லன் நடிகருக்கான விருதை தனி ஒருவன் படத்தில் சித்தார்த்த அபிமன்யு கேரக்டரில் நடித்த அரவிந்த்சாமி பெற்றிருக்கிறார். சிறந்த காமெடி நடிகருக்கான விருதை தம்பி ராமையா பெற்றிருக்கிறார். அதேபோன்று சிறந்த நகைச்சுவை நடிகைக்கான விருதை 36 வயதினிலே படத்தில் நடித்த சின்னத்திரை நடிகை தேவதர்ஷினிக்கு கொடுத்திருக்கிறார்கள்.

சிறந்த குணசித்திர நடிகருக்கான விருதை அபூர்வ மகான் திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகர் தலைவாசல் விஜய் பெற்றிருக்கிறார். அதேபோன்று அந்த வருடத்திற்கான சிறந்த குணச்சித்திர நடிகை விருதை பாபநாசம் படத்தில் நடித்ததற்காக நடிகை கௌதமி பெற்றிருக்கிறார். 2015 ஆம் ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளர் விருது பாபநாசம் மற்றும் உத்தம வில்லன் போன்ற படங்களில் இசையமைத்த ஜிப்ரானுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

Also Read: தனி ஒருவன் 2ல் சித்தார்த் கேரக்டரில் நடிக்க தேர்வான 5 ஹீரோக்கள்.. வாய்ப்பை தட்டி தூக்கிய வாரிசு நடிகர்

Trending News