சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

2021 சர்ச்சையில் சிக்கிய 7 படங்கள்.. அதிலும் மரண ஹிட்டடித்த மூன்று படங்கள்

தமிழ் சினிமாவில் சில படங்கள் ஒரு சில காரணங்களால் சர்ச்சைகளில் சிக்குகிறது. படங்களில் இடம்பெறும் சர்ச்சைக்குரிய வசனங்கள் மற்றும் சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்கள் ஆல் மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்புகிறது. பின்பு இந்த சர்ச்சையால் படத்தின் மார்க்கெட் உயர்ந்து மக்களிடையே சென்றடைகிறது. அந்த வகையில் சென்ற ஆண்டு சர்ச்சையில் சிக்கிய திரைப்படங்களைப் பார்க்கலாம்.

ஜெய் பீம்: உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஜெய்பீம் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் வரும் எஸ் ஐ வீட்டில் வன்னியர் சங்கத்தைக் குறிக்கும் அக்கினி கலச காலண்டர் இடம் பெற்றக் காட்சியும், உண்மைக் கதைக்கு மாறாக எஸ் ஐ அதிகாரியின் பெயர் குருமூர்த்தி என்று இருந்ததற்கும் பாமக தரப்பில் எதிர்ப்புக் கிளம்பியது.

ருத்ர தாண்டவம்: திரௌபதி இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவான திரைப்படம் ருத்ரதாண்டவம். இப்படத்தின் ஸ்நீக் பீக் விடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. தேவாலயம் ஒன்றில் பாதிரியாரான மனோபாலா சாத்தான்களை விரட்டியடிக்க எல்லோரிடமும் காணிக்கை கேட்பதுபோல் காட்சிகள் காட்டப்பட்டிருந்தது. இந்த காட்சி கிறிஸ்துவ மதத்தை விமரிசிப்பது போல் உள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

கர்ணன்: பரியேறும் பெருமாள் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கர்ணன். கொடியங்குளம் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இப்படம் அதிமுக ஆட்சியில் நடந்த கலவரத்தை திமுக ஆட்சியில் நடந்ததுபோல சித்தரித்துள்ளார்கள் என திமுக ஆதரவாளர்கள் குற்றம் சாட்டினார். கர்ணன் படம் வெளியான தேதி முதல் படத்தின் டைட்டில் வரை சர்ச்சையில் சிக்கி இருந்தாலும் படம் மாபெரும் வெற்றி பெற்றது.

மேதகு: விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கையை போற்றும் வகையில் மேதகு என்ற படம் எடுக்கப்பட்டு இருந்தது. மேதகு படத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற விதமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாக ஒரு ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

தலைவி: ஏ எல் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான திரைப்படம் தலைவி. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டு இருந்தது. இப்படத்தில் ஜெயலலிதா, எம் ஜிஆர் சம்பந்தமான காட்சிகள் பல உண்மைக்கு புறம்பாக இருப்பதாக கூறி தலைவி படத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

என்னங்க சார் உங்க சட்டம்: பிரபு ஜெயராம் இயக்கத்தில் உருவான திரைப்படம் என்னங்க சார் உங்க சட்டம். இப்படத்தில் இடம்பெற்ற சாதியை ஒழிக்க முடியாது, ஏனென்றால் அது கடவுளோடு கலந்துவிட்டது என்ற பல வசனங்களால் பல தரப்பினரிடமிருந்து இப்படத்திற்கு எதிராகக் கிளம்பியது.

பேச்சுலர்: ஜிவி பிரகாஷின் படங்கள் சர்ச்சையில் சிக்குவது வழக்கம்தான். த்ரிஷா இல்லனா நயன்தாரா படம் வெளியாகி பெண்களைக் குறித்து விமர்சிப்பது போல் டபுள் மீனிங் டயலாக் இடம்பெற்றதாக சர்ச்சை கிளம்பியது. அதேபோல் பேச்சுலர் படத்தின் போஸ்டர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

- Advertisement -spot_img

Trending News