கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாத நிலையில் பல திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியானது. அமேசான் பிரைம் வீடியோ, நெட்ப்ளிக்ஸ், சோனி லைவ், ஜீ 5, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆகிய ஓடிடி தளங்களில் படங்கள் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அந்த வகையில் ஓடிடி தளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 10 படங்களைப் பார்க்கலாம்.
ஜெய் பீம்: ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த திரைப்படம் ஜெய் பீம். இப்படத்தை சூர்யா, ஜோதிகாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. தீபாவளியையொட்டி நேரடியாக ஓடிடியில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்றது.
சார்பட்டா பரம்பரை: பா ரஞ்சித் இயக்கத்தில் குத்துச் சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இப்படத்தில் ஆர்யா, ஜான் கோக்கன், துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள். இப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மண்டேலா: யோகி பாபு நடிப்பில் காமெடி திரைப்படமாக வெளியானது மண்டேலா. இப்படத்தை மடோன் அஸ்வின் இயக்கியிருந்தார். இப்படம் நேரடியாக 2021 ஏப்ரல் 4 அன்று விஜய் தொலைக்காட்சி வழியாகவும், மறுநாள் சர்வதேச அளவில் நெட்பிளிக்ஸ் மூலமாகவும் வெளியிடப்பட்டது.
லிப்ட்: வினித் வரப்பிரசாதி இயக்கத்தில் கவின், அமிர்தா ஐயர் ஆகியோர் நடிப்பில் வெளியான திகில் திரைப்படம் லிப்ட். இந்த ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி நேரடியாக ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியானது. இப்படம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வெற்றி பெற்றது.
வினோத சித்தம்: சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவான வினோத சித்தம் படத்தில் சமுத்திரகனி, தம்பி ராமையா ஆகியோர் நடித்திருந்தார்கள். இப்படம் அக்டோபர் 13ஆம் தேதி ஜீ5 வழியாக நேரடியாக வெளியானது. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
ஓமணப் பெண்ணே: ஹரிஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான ஓமணப் பெண்ணே படத்தை கார்த்திக் சுந்தர் இயக்கியிருந்தார். இப்படம் அக்டோபர் 22ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வழியாக வெளியானது. காதல் கதையாக எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
ஏலே: ஹலிதா ஷமீம் இயக்கத்தில் சமுத்திரக்கனி, மணிகண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் ஏலே. இப்படத்தின் தயாரிப்பாளர்கள் இதனை விஜய் தொலைக்காட்சியல் வெளியிட முடிவு செய்தனர். இதனால் பிப்ரவரி 28 இல் ஏலே படம் விஜய் தொலைக்காட்சியில் வெளியானது. பின்னர், இப்படம் மார்ச் 5 இல் உலகம் முழுவதும் நெட்பிளிக்ஸ் மூலம் வெளியிடப்பட்டது
டெடி: சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா முக்கிய வேடத்தில் நடித்த திரைப்படம் டெடி. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல்ராஜா தயாரித்திருந்தார்.
டெடி படம் மார்ச் 12ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வழியாக வெளியானது.
திட்டம் ரெண்டு: விக்னேஷ் கார்த்திக் இயக்கியிருந்த திட்டம் ரெண்டு படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். திரில்லர் படமாக எடுக்கப்பட்ட இப்படத்தை தினேஷ் கண்ணனின் சிக்ஸர் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், வினோத் குமாரின் மினி ஸ்டுடியோஸ் நிறுவனமும் தயாரித்துள்ளது. திட்டம் ரெண்டு படத்தை ஜூலை 30 அன்று சோனி லைவ் தளத்தில் வெளியானது.
டிக்கிலோனா: கார்த்திக் யோகி இயக்கத்தில் நகைச்சுவையாக எடுக்கப்பட்ட இப்படத்தில் சந்தானம், அனகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி ஜீ 5 இல் வெளியானது. டிக்கிலோனா கலவையான விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது.