திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

2021 ஆம் ஆண்டு பிறந்த 5 பிரபல நடிகர்களின் வாரிசு

இந்த 2021 ஆண்டு முடிய இன்னும் ஒரு சில வாரங்களே உள்ளன. இந்த ஆண்டு பல கோலிவுட் பிரபலங்களுக்கு திருமணம் ஆகியது. சில திரை நட்சத்திரங்கள் பெற்றோரும் ஆகியுள்ளனர். அந்த வகையில் இந்த ஆண்டு குழந்தைகளைப் பெற்று கொண்ட 5 கோலிவுட் நட்சத்திரங்களைப் பார்ப்போம்.

ஆர்யா, சாயிஷா: கஜினிகாந்த் படத்தில் இணைந்து நடித்தபோது ஆர்யாவும், சாயிஷாவும் இருவரும் காதலித்து வந்தனர். இந்த ஜோடி மார்ச் 2019 இல் திருமணம் செய்து கொண்டார்கள். மேலும், பிரம்மாண்டமான திருமண விழாவில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஆர்யா, சாயிஷாவுக்கு கடந்த ஜூலை மாதம் பெண் குழந்தை பிறந்தது. இந்த மகிழ்ச்சியான செய்தியை ஆர்யாவின் நண்பரான நடிகர் விஷால் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

ஆரவ், ராஹி: ஜோஷ்வா படத்தில் நடித்த நடிகை ராஹேயை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆரவ் திருமணம் செய்து கொண்டார். ஆரவ், ராஹி இருவருக்கும் இந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தனர். மேலும், ஆரவ் அவருடைய சமூக ஊடகங்களில் இந்த மகிழ்ச்சியான தருணத்தைப் பகிர்ந்திருந்தார்.

ஆர்கே சுரேஷ், மது: ஆர் கே சுரேஷ் கடந்த ஆண்டு மதுவை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். பின்னர், இந்த தகவல் இணையத்தில் பரவ தொடங்கியதால் சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். ஆர் கே சுரேஷ், மது இவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் பெண் குழந்தை பிறந்தது.

அருள்நிதி, கீர்த்தனா: அருள்நிதி, கீர்த்தனா இருவரும் 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு மகிழ் என்ற ஒரு அழகான மகன் உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு வாரத்திற்கு முன்பு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. அதை அருள்நிதி தனது ட்விட்டர் பக்கத்தில் தங்களுக்கு தேவதை பிறந்துள்ளது என அறிவித்தார்.

சிவகார்த்திகேயன், ஆர்த்தி: சிவகார்த்திகேயன் படங்களில் புகழ் பெறுவதற்கு முன்பு ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார். இதனால் சிவகார்த்திகேயன் ஆர்த்தியை அதிர்ஷ்டசாலி என்று கூறுவார். இந்த தம்பதிக்கு முதலில் ஆராதனா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

Trending News