வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

2021 ஆம் ஆண்டு ரியாலிட்டி ஷோவில் பட்டம் என்ற 5 பிரபலங்கள்.. இதில் சர்வைவர் தான் செம ஹைலைட்

இந்த வருடம் சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோ மூலம் பரிசுகளை வென்று பட்டத்தை தட்டி சென்ற முதல் 5 நபர்களின் பட்டியலை பார்க்கலாம். இதன் மூலம் வெள்ளித்திரையில் நுழைவதற்கான  பட வாய்ப்புகளை ஒரு சில நடிகர்கள் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் சிங்கர் சீசன் 8: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. ஒவ்வொரு சீசனிலும் பங்கேற்கும் போட்டியாளர்கள் ஆரம்பத்தில் யாரென்றே தெரியாதவர்களாக இருந்தாலும் சீசன் முடிந்து அவர்கள் வெளியில் செல்லும்போது பெரிய ரசிகர் கூட்டத்துடன் தான் செல்வார்கள். அந்த வகையில் பரபரப்பாக நடந்த முடிந்த சூப்பர் சிங்கர் 8-ம் சீசனின் வெற்றியாளராக மக்களின் ஃபேவரட் போட்டியாளர் ஸ்ரீதர் சேனா வெற்றி பெற்றார்.

மாஸ்டர் செஃப்: சன்டிவியில் உலகத்தரம் வாய்ந்த பிரம்மாண்ட சமையல் நிகழ்ச்சி மாஸ்டர் செஃப். இந்நிகழ்ச்சியை வெளித்திரையின் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். சர்வதேச செஃப்களான ஆர்த்தி சம்பத், ஹரீஷ் ராவ், கௌசிக் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். மாஸ்டர் செஃப் சீசன் 1ல் தேவகி வெற்றி பெற்றார்.

பிபி ஜோடிகள்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிகிழ்ச்சி பிபி ஜோடிகள். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் கலந்து கொள்ளும் நடன போட்டி பிபி ஜோடிகள். இந்நிகழ்ச்சியில் நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் நடுவராக இருந்தனர். இப்போட்டியில் அனிதா, ஷாரிக் வெற்றிபெற்றனர்.

மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை: சின்னத்திரையில் மிக பிரபலமாக இருக்கும் 12 ஜோடிகள் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரையில் பங்கு பெற்றார்கள். இந்நிகழ்ச்சியில் மாகாபா மற்றும் அர்ச்சனா தொகுத்து வழங்கினர். மேலும், நடிகை தேவதர்ஷினி மற்றும் தொகுப்பாளர் கோபிநாத் இந்த நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றனர். மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை இறுதி சுற்றில் சரத், கிருத்திகா வெற்றி பெற்றனர்.

சர்வைவர்: ஜீ தமிழில் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சி சர்வைவர். இந்நிகழ்ச்சியை ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கினார். இதில் கடுமையான போட்டிகள் நடத்தப்படும். இந்நிகழ்ச்சியின் இறுதியில் நடிகை விஜயலட்சுமி வெற்றி பெற்றார்.

Trending News