புதன்கிழமை, ஜனவரி 8, 2025

2021 TN FAST புதிய தொழில் கொள்கையை வெளியிட்ட தமிழக முதல்வர்.. மகிழ்ச்சியில் சிறு குறு தொழில் நிறுவனங்கள்!

தற்போது அதிமுக அரசின் சார்பில் தமிழகத்தின் முதலமைச்சராக செயல்படும் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் தமிழக அரசின் சார்பில் 2021 ஆம் ஆண்டிற்கான ‘TN FAST’ புதிய தொழில் கொள்கையை வெளியிட்டுள்ளார்.

ஏனெனில் தமிழகத்தில் பெரு தொழில் நிறுவனங்கள் அனைத்தும் தங்களது 40 சதவீத பணிகளுக்கு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை நம்பி உள்ளது.  பெருநிறுவனங்களின் வளர்ச்சி என்றால், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை சார்ந்திருப்பதால்,அவற்றிற்கு வழங்கப்படும் மானியம் மூன்று மடங்காக உயர்த்தப்பட்டு 1.5 கோடி ரூபாயாக வழங்கப்படும் என்ற அறிவிப்பை தற்போது தமிழக முதல்வர் வெளியிட்டுள்ளார்.

ஆகையால் தமிழகத்தில் தகுதி வாய்ந்த தொழில் நிறுவனங்களுக்கு முதல் நான்கு ஆண்டுகாலம் செயல்பட தேவையான அனுமதியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் வகையில், 2021 ஆம் ஆண்டிற்கான புதிய கல்விக் கொள்கையானது TN FAST என்ற திட்டம்  செயல்படுத்தப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும்  கொரோனா பேரிடர் காலத்திலும் தமிழக அரசுக்கு 61500 கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் முதலீடுகளை ஈர்த்து சாதனை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏனென்றால் ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு, கொரோனா என தொடர்ந்து பல பிரச்சனைகளை சந்தித்து மீளமுடியாத குறு சிறு தொழில் நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களை சீரமைத்து செய்வதற்கு போதிய அளவு முதலீடு இல்லாததால், மத்திய அரசின் குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் முதலீட்டு வரம்புகளை உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவும் அவற்றை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு தற்போது 2021 ஆண்டிற்கான புதிய தொழில் கொள்கையை பல்வேறு மானியங்கள் மற்றும் சலுகைகளுடன் தனியாக தொழில் கொள்கையை தற்போது வெளியிட்டு தமிழக அரசு சாதனை புரிந்துள்ளது.

Trending News