பாண்டு: தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு. சின்னத்தம்பி, திருமதி பழனிசாமி, உள்ளத்தை அள்ளித்தா, காதல் கோட்டை, ஏழையின் சிரிப்பில் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் மே 6ஆம் தேதி கொரோனா பாதிப்பால் பாண்டு உயிரிழந்தார்.
விவேக்: தமிழ் சினிமாவில் விவேக் அவருடைய நகைச்சுவை மூலம் லஞ்சம், மக்கள்தொகைப் பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கைப் போன்றவற்றை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார். இவரை சின்னக் கலைவாணர் என்றும் ஜனங்களின் கலைஞன் என்றும் அடைமொழியிட்டு அழைக்கின்றனர். விவேக் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இவருடைய இறப்பு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நெல்லை சிவா: நெல்லை தமிழில் பேசி தமிழ் சினிமா மற்றும் சீரியல்களில் ரசிகர்களை கவர்ந்தவர் நெல்லை சிவா. வடிவேலின் கிணத்தை கானாம் காமெடியில் போலீஸ் அதிகாரியாக வந்து இவர் பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். நெல்லை சிவா மே 11ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார்.
தீப்பெட்டி கணேசன்: தீப்பெட்டி கணேசன் ரேணிகுண்டா திரைப்படத்தில் அறிமுகமானார். இப்படத்திற்கு பிறகு பில்லா 2, தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, ராஜபாட்டை என பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த மார்ச் 22ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.
மாறன்: விஜய் நடிப்பில் வெளியான கில்லி, குருவி உள்ளிட்ட படங்களில் நடித்துவர் நடிகர் மாறன். சமீபத்தில் பா.இரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் கொரோனா தோற்றால் கடந்த மே மாதம் 13 தேதி உயிரிழந்தார்.