தமிழ் சினிமாவைப் பொருத்தவரை ஹீரோவுக்கு தான் முக்கியத்துவம் வாய்ந்த கதையாக இருக்கும். ஆனால் சமீபகாலமாக ஹீரோவுக்கு இணையான வலுவான கதாபாத்திரம் வில்லனுக்கும் கொடுக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கலக்கிய 5 வில்லன்களை பார்ப்போம்.
எஸ் ஜே சூர்யா: எஸ் ஜே சூர்யா ஹீரோவாக நடித்த படங்களை காட்டிலும் வில்லனாக நடிக்கும் படங்களே அவரை பெரிய அளவில் பேசப்படுகிறது. இந்த ஆண்டு எஸ் ஜே சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படத்தில் போலீஸ் அதிகாரி, தனுஷ்கோடி ஆக மிரட்டி இருந்தார்.
நடராஜ்: நடராஜ் சதுரங்கவேட்டை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தில் போலீஸ் அதிகாரி கண்ணபிரான் கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். கர்ணன் படத்தில் நட்டி நடராஜ் நடிப்பை பார்த்து பல பிரபலங்களும் வாழ்த்தினார்கள்.
விஜய் சேதுபதி: இந்த ஆண்டு தொடக்கத்திலேயே பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக பவானி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வெளியான படங்கள் எதுவும் சரியாக போகவில்லை.
ஹக்கீம் ஷா: நிஷாந்த் கலிதிண்டி இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான திரைப்படம் கடைசீல பிரியாணி. இப்படம் தந்தையின் மரணத்திற்குப் பழிவாங்கத் தயாராகும் மூன்று சகோதரர்களின் கதையைச் சுற்றி வருகிறது. காமெடி படமாக எடுக்கப்பட்ட இப்படத்தில் ஹக்கீம் ஷா வில்லனாக நடித்து அசத்தி இருந்தார்.
வினய்: வினய் உன்னாலே உன்னாலே படத்தின் மூலம் சாக்லேட் பாயாக ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர். இதுவரை ஹீரோவாக நடித்து வந்த வினய் துப்பறிவாளன் படத்தின் மூலமாக வில்லனாக நடிக்கத் தொடங்கினார். இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தில் குழந்தைகளை கடத்தி தொழில் பண்ணும் டானாக டெரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.