தமிழ் சினிமா கொரனோ பரவல் காரணமாக சென்றாண்டு முடங்கியது. இதனால் படங்கள் எல்லாம் ஒடிடி தளத்தில் வெளியானது. தற்போது மீண்டும் புதுப்பொலிவுடன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. முன்னணி நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகிறது. மிக எதிர்பார்ப்புடன் வந்த சில முன்னணி நடிகர்களின் படங்கள் இந்த ஆண்டு மிக மோசமான தோல்வியை சந்தித்தது.
பூமி: ஜெயம் ரவி நடிப்பில் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான திரைப்படம் பூமி. இதில் நிதி அகர்வால், ரோனிட் ராய் மற்றும் சதீஸ் என பலர் நடித்துள்ளார்கள். சமீபகாலமாக ஜெயம்ரவி சமுதாயம் சார்ந்த படங்களில் நடித்து வெற்றி கண்டுள்ளார். அதேபோல் விவசாயத்தை மகத்துவத்தை மக்களுக்கு உணர்த்தும் வகையில் எடுக்கப்பட்ட பூமி படத்தில் நடித்தார். வாட்ஸ்அப் ஃபார்வர்டு மெசேஜ்களை திரைப்படமாக எடுத்து வைத்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளால் இப்படம் படுதோல்வியை சந்தித்தது.
லாபம்: எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் லாபம். மிகச் சிறந்த இயக்குனர், மிகச் சிறந்த நடிகர் என பெரும் எதிர்பார்ப்பில் வெளியான லாபம் படம் தோல்வியடைந்தது. இதற்குக் காரணம் பெருவயல் எனும் ஒரு சிறு கிராமத்தில் விவசாய பூமியை அபகரித்து, மக்களை துன்புறுத்தி, அடிமையாக்கி வைத்து இருக்கிறார். ஜெகபதி பாபு என்ற வில்லன் கதாபாத்திரம். தமிழ் சினிமாவில் காலம் காலமாக நம்பியார் காலத்தில் இருந்து இப்படிப்பட்ட கதைகளை பார்த்து வருகிறது . இதனால் இப்படம் ரசிகர் மத்தியில் செல்லுபடியாகவில்லை.
ஜகமே தந்திரம்: முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் படம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவரும். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜகமே தந்திரம். கர்ணன் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில் ஜகமே தந்திரம் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது. இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் தோல்வியை சந்தித்தது.
அரண்மனை 3: சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 1,2 படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில் அரண்மனை 3 மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது. பிரமாண்ட செலவில் உருவான இப்படத்தில் சுந்தர் சி, ஆர்யா, சாக்ஷி அகர்வால், ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, விவேக், மைனா நந்தினி, யோகி பாபு, நளினி, மனோபாலா, சம்பத் ராஜ், ஓவி பண்டர்கர், வின்சென்ட் அசோகன் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் படத்தில் சுவாரஸ்யம் குறைந்ததால் அரண்மனை 3 படுதோல்வியை சந்தித்தது.