சமீபகாலமாக தமிழ் சினிமாவில் திரில்லர் படங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு வெளியான சிறந்த 4 திகில் திரைப்படங்களைப் பார்க்கலாம்.
திட்டம் இரண்டு: இந்தாண்டு ஐஸ்வர்யா ராஜேஷின் மிரட்டலான நடிப்பில் வெளியான திரைப்படம் “திட்டம் இரண்டு”. இப்படத்தை விக்னேஷ் கார்த்திக் இயக்கியிருந்தார். இப்படம் புதுமையான கதைக்களத்தை கொண்டு வித்தியாசமான முயற்சியில் எடுக்கப்பட்டிருந்தது. இப்படத்தின் இறுதிக் காட்சிகள் அனைவரையும் வியக்கவைத்தது.
லிப்ட்: இயக்குனர் வினித் வரப்பிரசாத் இயக்கத்தில் கவின் மற்றும் அமிர்தா ஐயர் இணைந்து நடித்த லிப்ட் திரைப்படம் திரில்லர் கதையில் உருவானது. ஒரே ஒரு ஆபீஸ் மற்றும் அதிலுள்ள லிஃப்டை மட்டுமே வைத்து இப்படி ஒரு ஹாரர் படத்தை கொடுக்க முடியுமா என்று அனைவரையும் பிரமிக்க வைத்திருந்தது. இந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.
வனம்: ஸ்ரீகண்டன் ஆனந்த் இயக்கத்தில் வெற்றி நடிப்பில் வெளியான திரைப்படம் வனம். வெற்றி “8 தோட்டாக்கள்”, ஜீவி, “கேர் ஆப் காதல்” என தனது ஒவ்வொரு படங்களிலும் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். வனம் படத்தில் இயற்கையை நாம் அழித்தால் ஒரு காலத்தில் அது நம்மையே அழித்துவிடும் என்பதை திரில்லர் படமாக எடுக்கப்பட்டது.
அன்பிற்கினியாள்: ஹெலன் என்ற மலையாள படத்தை தமிழில் அன்பிற்கினியாள் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அன்பிற்கினியாள் படத்தில் அருண் பாண்டியன் மற்றும் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். ஒரு தனி அறையில் குளிரில் மாட்டிக்கொள்ளும் பெண் தன்னை எப்படி காப்பாற்றி கொள்ள முயற்சி செய்கிறாள் என்பது படத்தின் கதை.