சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

2021 ஆம் ஆண்டு ரிப்பீட் மோடில் கேட்ட 10 பாடல்கள்.. 2 ஹிட் கொடுத்து மாஸ் காட்டிய விஜய்

இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் வெளிவந்த சூப்பர் ஹிட்டான 10 பாடல்களின் மொத்த லிஸ்டை தற்போது பார்க்கலாம். தளபதி விஜய் இரண்டு முக்கிய பாடலுக்கு நடனம் ஆடி ரிப்பீட் மோடில் கேட்க வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புஜ்ஜி: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான திரைப்படம் ஜகமே தந்திரம். தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 13-ம் தேதி ஜகமே தந்திரம் படத்தின் புஜ்ஜி பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார். ரசிகர்கள் அதிகம் கேட்கும் பாடலில் முதலிடத்தை புஜ்ஜி பாடல் பெற்றுள்ளது.

செல்லம்மா: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான டாக்டர் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இந்த படத்தில் வரும் செல்லம்மா செல்லம்மா பாடல் இந்த வருடம் இணையத்தில் வைரலாக பரவியது. இப்பாடலை அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்திருந்தார்.

வாத்தி கம்மிங்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகன் நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் வரும் வாத்தி கம்மிங் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இப்பாடலுக்கு அனிருத் இசையமைத்திருந்தார். வாத்தி கம்மிங் பாடல் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் செம்ம ட்ரெண்டாக இருந்தது.

மாங்கல்யம்: சிம்பு நடிப்பில் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான திரைப்படம் ஈஸ்வரன். இப்படத்தில் இடம்பெற்ற மாங்கல்யம் பாடல் அதிக நபரால் பார்க்கப்பட்டுள்ளது.
மாங்கல்யம் பாடலை சிலம்பரசன், ரோஷினி மற்றும் தமன் மூவரும் இணைந்து பாடியுள்ளனர். யுகபாரதி பாடல் வரிகளை எழுதியுள்ளார். எஸ் தமன் இசை அமைத்துள்ளார்.

தாராள பிரபு: ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான திரைப்படம் தாராள பிரபு. இப்படத்தில் வெளியான டைட்டில் ட்ராக் பாடல் பலரையும் கவர்ந்தது. இப்பாடலுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் பாடல் வரிகள் எழுதி, அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்திருந்தார்.

யார் அழைப்பது: திலிப் குமார் இயக்கத்தில் மாதவன், ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் மாறா. இப்படத்தில் இடம்பெற்ற யார் அழைப்பது பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார். சித் ஸ்ரீராம் பாடிய இந்த பாடல் வரிகளை தாமரை எழுதியிருந்தார்.

ரகிட்ட ரகிட்ட: தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் படத்தில் இடம்பெற்ற புஜ்ஜி பாடலைத் தொடர்ந்து ரகிட்ட ரகிட்ட பாடலும் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. மேலும் அதில் சஞ்சனா நடராஜன் போடும் நடனம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.

மாஸ்டர் தீ பிளாஸ்டர்: விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் வாத்தி கம்மிங் பாடலை தொடர்ந்து மாஸ்டர் படத்தின் தீம் சாங் மாஸ்டர் தீ பிளாஸ்டர் பாடல் ரசிகர்களால் அதிகமாக கேட்கும் பாடலில் இடம் பெற்றிருந்தது.

காட்டுப் பயலே: சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடித்த திரைப்படம் சூரரைப்போற்று. இப்படத்தில் இடம்பெற்ற காட்டு பயலே பாடல் மிகப் பெரிய ஹிட்டானது. இப்பாடலுக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

என்ஜாய் என்ஜாமி:சந்தோஷ் நாராயணன் இசையமைத்த என்ஜாய் என்ஜாமி பாடல் மிகப் பெரிய ஹிட்டானது. தி மற்றும் அறிவு பாடியுள்ள இந்த பாடல் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது. இந்த ஆண்டு ரசிகர்கள் அதிகம் கேட்கப்பட்ட பாடலில் இந்தப் பாடலும் இடம் பெற்றுள்ளது.

Trending News