சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

தியேட்டரை ஓரம்கட்டி டிவியில் வெளியான 9 படங்கள்.. அதிலும் சன் டிவி செலக்ட் பண்ண 4 படமும் ப்ளாப்

கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாத நிலையில் பல படங்கள் ஓடிடி தளத்தில் வெளியானது. அதிலும் சில முன்னணி நடிகர்களின் படங்கள் நேரடியாக சன், விஜய், கலர் தொலைக்காட்சிகளில் வெளியானது. சென்ற ஆண்டு நேரடியாக தொலைக்காட்சியில் வெளியான படங்களைப் பார்க்கலாம்.

புலிக்குத்தி பாண்டி: எம் முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமிமேனன், சமுத்திரகனி, சிங்கம்புலி நடிப்பில் வெளியான திரைப்படம் புலிகுத்தி பாண்டி. இப்படம் சென்ற ஆண்டு தைப்பொங்கல் மற்றும் நடிகர் விக்ரம் பிரபு பிறந்தநாள் அன்று நேரடியாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

ஏலே: இயக்குனர் ஹலீதா ஷமீம் இயக்கத்தில் சமுத்திரக்கனி, மணிகண்டன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் ஏலே. தந்தை, மகனுக்கு இடையே நடக்கும் நிகழ்வை நகைச்சுவை கலந்து ஏலே படம் எடுக்கப்பட்டிருந்தது. இப்படம் பிப்ரவரி 28ம் தேதி நேரடியாக விஜய் தொலைக்காட்சியில் வெளியானது.

மண்டேலா: மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் மண்டேலா. ஒரு முடி திருத்தும் தொழிலாளி தேர்தலில் இரண்டு கட்சிகளின் இடையே கேம் சேஞ்சர் ஆக மாறுகிறார். இப்படம் ஏப்ரல் 4ம் தேதி விஜய் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியானது.

சர்பத்: பிரபாகரன் இயக்கத்தில் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோவின் லலித் குமார் தயாரிப்பில் வெளியான திரைப்படம் சர்பத். இப்படத்தில் கதிர், சூரி, ரகசியா கோரக், அஸ்வத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் ஏப்ரல் 11ஆம் தேதி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வெளியானது.

வணக்கம் டா மாப்ள: ஜி வி பிரகாஷ், அமிர்தா ஐயர், ஆனந்தராஜ் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் வணக்கம் டா மாப்ள. இப்படம் மு இராசேசு இயக்கத்தில் காதல் நகைச்சுவை படமாக வெளியானது. இப்படம் ஏப்ரல் 16ம் தேதி சன் தொலைக்காட்சி வாயிலாக நேரடியாக வெளியானது.

வெள்ளை யானை: சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனி, ஆத்மியா ராஜன், சரண்யா ரவி, யோகி பாபு நடிப்பில் வெளியான திரைப்படம் வெள்ளை யானை. இப்படம் ஜூலை 11-ஆம் தேதி சன் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியானது.

பூமிகா: ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் பூமிகா. இப்படத்தில் அவந்திகா வந்தனாபு, வித்யா வெங்கடேஷ், பாவெல் நவகீதன் ஆகியோர் உடன் நடித்திருந்தார்கள். இப்படம் ஆகஸ்ட் 22ஆம் தேதி நேரடியாக விஜய் டிவியில் வெளியானது. மறுநாள் நெட்ஃபிக்ஸ் வாயிலாக சர்வதேச அளவில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

துக்ளக் தர்பார்: டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் படத்தில் விஜய் சேதுபதி பார்த்திபன், ராசி கன்னா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பகவதி பெருமாள் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் துக்ளக் தர்பார். இப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 10-ஆம் தேதி நேரடியாக சன் தொலைக்காட்சியில் வெளியானது.

என்றாவது ஒரு நாள்: துரைசாமி இயக்கத்தில் விதார்த், ரம்யா நம்பீசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் என்றாவது ஒரு நாள். இப்படத்தை தி தியேட்டர் பீப்புள் நிறுவனம் தயாரிப்பு இருந்தது. என்றாவது ஒரு நாள் படம் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி வாயிலாக நேரடியாக வெளியானது.

Trending News