2021ல் நடிகர்கள் நடித்த திரைப்படங்களின் மார்க்கெட், புகழ் மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த 10 இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் மற்றும் பல நடிகர்கள் உள்ளனர்.
ரஜினிகாந்த்: சூப்பர் ஸ்டார் ரஜினியின் 168-வது படமாக ‘அண்ணாத்த’ இந்த வருடம் தீபாவளிக்கு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும் சூப்பர் ஸ்டாருக்காகவே இப்படம் வசூல் சாதனை படைத்தது. இந்த ஆண்டு டாப் நடிகர்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளார் ரஜினிகாந்த்.
விஜய்: விஜயின் 64வது படமான மாஸ்டர் இந்த வருடம் பொங்கலுக்கு வெளியானது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.
சூர்யா: சூர்யா நடிப்பில் இந்த ஆண்டு வெளியான திரைப்படம் ஜெய் பீம். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அத்துடன் இப்படத்தில் சூர்யா வழக்கறிஞர் சந்துரு கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார்.
சிலம்பரசன்: சில வருடங்களாக சிம்பு நடித்த படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. சிம்பு ஒரு புதிய முயற்சியாக டைம் லுப் கதையை தேர்ந்தெடுத்து அருமையாக நடித்திருந்தார்.
தனுஷ்: தனுஷின் 41வது படம் கர்ணன். இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியிருந்தார். அசுரன் படத்திற்கு பிறகு தனுஷ் மீண்டும் அசுர நடிப்பை வெளிப்படுத்த கர்ணன் படத்தில் வாய்ப்பு கிடைத்திருந்தது. அதை சரியாக பயன்படுத்தி இருந்தார் தனுஷ்.
டாக்டர்: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் டாக்டர். சிவகார்த்திகேயன் படங்களிலேயே அதிக வசூல் வேட்டை செய்த படம் டாக்டர். இப்படம் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் பார்த்து ரசிக்கும் படியாக இருந்தது.
ஆர்யா: பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இப்படம் குத்துச் சண்டையை மையமாக எடுக்கப்பட்டது. இப்படத்தில் கபிலன் கதாபாத்திரத்தில் ஆர்யாவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.
விஜய் சேதுபதி: விஜய் சேதுபதிக்கு இந்த ஆண்டு கதாநாயகனாக நடித்த எந்த படங்களும் சரியாக போகவில்லை. ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் பவானி கதாபாத்திரத்தில் வில்லனாக அசத்தியிருந்தார். இந்த கதாபாத்திரம் மக்கள் மனதில் இடம் பிடித்தது.
விஜய் ஆண்டனி: ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் இந்த ஆண்டு வெளியான திரைப்படம் கோடியில் ஒருவன். ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் ஒருவன் என்ன ஆகிறான் என்பதே கோடியில் ஒருவன் படத்தின் கதை. இப்படத்தை விஜயராகவன் கதாபாத்திரத்தில் விஜய்ஆண்டனி கச்சிதமாக நடித்திருந்தார்.
கார்த்தி: பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் சுல்தான். நெப்போலியனுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை கடைசியில் கார்த்தி காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் கதை. இப்படத்தில் சுல்தானாக கார்த்தியின் நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்த ஆண்டு அஜித்தின் படங்கள் எதுவும் வெளியாகாததால் அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது. அடுத்த ஆண்டு வலிமை திரைப்படம் வெளியாக உள்ளதால் அஜித் முதல் இடத்தைப் பிடிப்பார் என அவர் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.