திங்கட்கிழமை, நவம்பர் 18, 2024

2021 ஆம் ஆண்டு பிரபலமான 10 நடிகைகள்.. முதலிடம் யாருக்கு தெரியுமா.?

தமிழ் சினிமாவில் தற்போது நடிகர்களுக்கு இணையாக நடிகைகளும் போட்டி போட்டுக் கொண்டு நடித்து வருகிறார்கள். அந்த வகையில் 2021 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவில் பிரபலமான டாப் 10 நடிகைகளை பார்க்கலாம்.

நயன்தாரா: மிலிண்ட் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் நெற்றிக்கண். இப்படத்தில் பார்வையற்ற சிபிஐ ஆபீசராக முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார் நயன்தாரா. இப்படத்தில் நயன்தாராவின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

கங்கனா ரனாவத்: ஏ எல் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான திரைப்படம் தலைவி. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சுயசரிதையாக எடுக்கப்பட்ட இப்படத்தில் கங்கனாவின் நடிப்பு அப்படியே ஜெயலலிதாவைப் பிரதிபலித்தது.

லிஜோமோல் ஜோஸ்: சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். இப்படத்தில் செங்கேணி என்ற பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் லிஜோமோல் ஜோஸ். இவர் செங்கேணி கதாபாத்திரத்தை அப்படியே நம் கண்முன் கொண்டு வந்துள்ளார். இவரது நடிப்பைப் பலரும் குறிப்பிட்டுப் பாராட்டி வருகின்றனர்.

ஐஸ்வர்யா ராஜேஷ்: விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் திட்டம் இரண்டு. இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் இன்ஸ்பெக்டராக கம்பீரமான நடிப்பால் அனைவரையும் ஈர்த்துள்ளார். அவருடைய பேச்சிலும், உடல்மொழியிலும் போலீஸ்கான சாயலை கொண்டு வந்துள்ளார்.

ஜோதிகா: சரவணன் இயக்கத்தில் சசிகுமார், ஜோதிகா நடிப்பில் வெளியான திரைப்படம் உடன்பிறப்பு. ஜோதிகாவின் 50வது படம். இப்படத்தில் அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. ஒரு பக்கம் கணவர் சமுத்திரக்கனி, மற்றொரு பக்கம் அண்ணன் சசிகுமார். இருவரையும் விட்டுக் கொடுக்காமல் பேலன்ஸ் செய்திருப்பார். இப்படத்தில் ஜோதிகா தஞ்சாவூர் பெண்ணாகவே மாறி இருந்தார்.

டாப்சி : தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, டாப்ஸி நடிப்பில் வெளியான திரைப்படம் அன்னபெல்லே சேதுபதி. இப்படத்தில் சேதுபதியின் மனைவியாக அன்னபெல் கதாபாத்திரத்தில் டாப்சி நடித்திருந்தார். இப்படத்தில் டாப்சி வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து நடித்ததால் ரசிகர்களின் பாராட்டையும் பெற்றார்.

ஆனந்தி: நடுக்காவேரி படத்தில் சராசரி பெண்ணாக இருக்கும் கமலி பல தடைகளைத் தாண்டி சென்னை உள்ள ஐஐடியில் படிக்க செல்கிறார். கிராமத்து மாணவிக்கு சென்னை போன்ற பெருநகரங்களில் படிக்கும்போது ஏற்படும் சவால்கள், தடைகள் என்னென்ன போன்ற கேள்விகளுக்குப் பதிலாக கமலி உள்ளார். இப்படத்தில் கமலி கதாபாத்திரத்தின் வலிகளை அப்படியே காட்டியுள்ளார் கயல் ஆனந்தி.

நந்திதா: செல்வராகவன் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. இப்படத்தில் எஸ் ஜே சூர்யாவின் மனைவியாக நந்திதா நடித்திருந்தார். ஒரு பணக்கார வீட்டுப் பெண் எப்படியெல்லாம் நடந்து கொள்வாரா அப்படியே நடந்து கொண்டு நடிப்பில் அசத்தி உள்ளார்.

ரெஜினா கசான்ட்ரா: நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் வீட்டு வேலைக்குச் செல்லும் ஒரு சாதாரணப் பெண்ணாக நடித்திருந்தார் ரெஜினா. அவர் முகத்தில் காட்டும் உணர்வுகளும், கண் அசைவுகள் அனைவரையும் பிரமிக்கச் செய்தது. பின் பேயாக மாறிய ரெஜினா ஒவ்வொரு காட்சியிலும் ஸ்கோர் செய்தார்.

துஷாரா விஜயன்: பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இப்படத்தில் கபிலனின் மனைவியாக துணிச்சலான மாரியம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் துஷாரா விஜயன். இவருடைய நடிப்பில் போதை ஏறி புத்தி மாறி என்ற படம் வெளியானாலும், இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியது சார்பாட்டா பரம்பரை திரைப்படம் தான்.

- Advertisement -spot_img

Trending News