2023 best 6 tamil movies: இந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரங்கள், பெரிய பட்ஜெட், விளம்பர வியாபார தந்திரங்கள் மூலம் பழைய மசாலா கதையை புதுப்பித்து பெரிய அளவில் ரீச் பண்ண வைத்து வசூலையும் கோடிகளில் குவித்து வருகின்றனர். ஆனால் கதையோடு அழுத்தமான கதையை ரசிகர்களின் ஆழமாக வேரூன்றி தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தன சில படங்கள்,
அயோத்தி: “மனிதனுக்கு மனிதன் உதவி செய்ய மதம் தேவையில்லை மனிதம் போதும்” என்ற ஆழமான கருத்தை அழுத்தத்துடன் பதிவு செய்திருந்தார் இயக்குனர் மந்திரமூர்த்தி. இப்படத்தில் சசிகுமார், புகழ், பிரியா அஸ்ராணி இவர்களுடன் வரும் சின்ன சின்ன கதாபாத்திரங்கள் கூட படத்திற்கு பலம் சேர்த்து இருந்தனர்.
டாடா: கணேஷ்பாபு இயக்கத்தில் கவின், அபர்ணாதாஸ் நடித்த டாடா, தந்தை மற்றும் மகன் உறவின் அற்புதத்தை உணர்வு பூர்வமாக ரசிகர்களின் மனதில் பதிவு செய்தது. படத்தில் நாயகனை அதிகம் பேச விடாமல் ரசிகர்களை பேச வைத்து விட்டார் இயக்குனர். டாடாவின் பட்ஜெட்டோ குறைவு வசூலோ நிறைவு.
குட் நைட்: நடுத்தர குடும்பத்தின் கேலி, கிண்டல், ஆபீஸ், அவமானம், காதல், சோகம், பிரிவு, இணைவு மற்றும் குறட்டை என அனைத்தையும் கலந்து வேறுபட்ட கோணத்தில் ஸ்வீட் ட்ரீம்ஸ் உடன் வந்த இந்த குட் நைட், ரசிகர்களை காலி செய்து விட்டது. இப்படத்தில் நடித்த மணிகண்டன், மீத்தா, ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல்,பகவதி பெருமாள் என ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களை படத்தின் ஊடே ஒன்ற செய்தது.
Also Read: சோலோ ஹீரோயின் கதையா.? உடனே ஓகே சொல்லும் 5 நடிகைகள், நயன் மார்க்கெட் கம்மியானதால் வந்த விளைவு
போர் தொழில்: சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா நடிப்பில் நடித்து விக்னேஷ் ராஜா இயக்கிய போர் தொழில். ஆக்சன், திரில்லர், சஸ்பென்ஸ் திரைப்படமாகும். வழக்கமான சைக்கோ கில்லர் படம் ஆனாலும் கடைசிவரை விறுவிறுப்புடன் காய் நகர்த்திய இயக்குனருக்கு ஒரு சபாஷ் போடலாம். வித்தியாசமான கொலை முயற்சியை அறிமுகப்படுத்தி ரசிகர்களை இருக்கை நுனியில் கட்டி போட்டு விட்டார் இயக்குனர்.
சித்தா: சமூக அவலங்களை ஒழிக்கும் வண்ணம் அருமையான திரை கதையுடன் ரசிகர்களை சிந்திக்க வைத்தார் இந்த சித்தா. படத்திற்கு உண்டான பிளஸ் எதுவென்றால் ஒரு பிரச்சனையை ஆண் பெண் என இரு கண் கொண்டு நோக்கி பெண்ணின் வலியையும் ஆணின் கோபத்தையும் உணர வைத்திருந்தார் இயக்குனர்.
பார்க்கிங்: ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம் எஸ் பாஸ்கர் நடிப்பில் வெளிவந்த பார்க்கிங் ஆர்பாட்டமான திரைக்கதையுடன் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. சமூகத்திற்கு சாதாரணமாக தோன்றும் பார்க்கிங் பிரச்சனை, ஆணின் கோபத்தை கிளறி குடும்பத்தினர் நிம்மதியை கெடுத்து விடுகிறது. ஹரிஷ் கல்யாண் மற்றும் எம் எஸ் பாஸ்கர் போட்டிபோட்டு நடித்து இருந்தனர். ஆணாதிக்கத்தின் பிம்பமாக திகழ்ந்த எம் எஸ் பாஸ்கர் மாறுபட்ட கோணத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றிருந்தார்.
Also read: ஹிட் படங்களை வைத்து காசு பார்க்கலாம் என 2023-இல் ரீமேக் செய்து படுதோல்வி அடைந்த 6 படங்கள்