வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

மிக்ஜாம் பாதிப்புக்கு நிவாரணம் வழங்கிய 6 ஹீரோக்கள்.. கோடியை 1000 குடும்பங்களுக்கு வாரி வழங்கிய வள்ளல்

2023 Chennai rain donation in 6 actor: 2023 ஆம் ஆண்டு எந்த பிரச்சனையும் இல்லாமல் முடிந்திருக்கும். ஆனா கடைசியா மிக்ஜாம் என்ற புயல் ஏற்பட்டு சென்னை மாநகரத்தையே தலைகீழாக புரட்டிப் போட்டது. ஆனால் மக்கள் மீண்டு வர வேண்டும் என திரை பிரபலங்கள் பலரும் நிவாரண நிதி அளித்தனர். அதிலும் குறிப்பிட்டு சொல்லக் கூடிய இந்த 6 நடிகர்கள் நிவாரண நிதியாக லட்சங்களில் முதல் கோடிகளில் வரை வள்ளல்களாக வாரி வழங்கினார்கள்.

விஜய் அரசியலுக்கு வருகிறார் என எல்லோருக்கும் தெரியும். ஆனால் இப்போது அவருடைய ரசிகர் மன்றத்தின் மூலமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏகப்பட்ட உதவிகளை செய்து வருகிறார். அதேபோல் தான் விஷ்ணு விஷால் வெள்ள நிவாரண நிதியாக 10 லட்சம் கொடுத்து இருக்கிறார்.

முதலில் காமெடி நடிகராகவும் இப்போது ஹீரோவாகவும் கலக்கிக் கொண்டிருக்கும் சூரி பாதிக்கப்பட்ட மக்களுக்காக 10 லட்சம் கொடுத்துள்ளார். அதேபோல் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் சேர்ந்து மொத்தமாக 10 லட்சத்தை தங்கள் சார்பாக கொடுத்திருக்கின்றனர். இவர்களுடன் ஹரிஷ் கல்யாணம் ஒரு லட்சம் கொடுத்துள்ளார்.

Also read: எந்த கொடியும் இல்ல ஸ்டிக்கரும் இல்ல.. கோடியில் வாரி வழங்கிய அஜித், பார்த்து கத்துக்கங்க தளபதி

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய  ஹீரோக்கள்

மேலும் சினிமாவில் இருக்கும் பிரபலங்களில் அஜித் காதும் காதுமாய் வைத்து நிறைய உதவிகளை ரசிகர்கள் முதல் சின்ன சின்ன நடிகர்களுக்கும் செய்யக்கூடியவர் என எல்லோரும் அறிந்தது தான். அதே போல் தான் புயல் வெள்ளத்தால் மக்கள் அவதிப்பட்ட சமயத்தில், தன்னுடைய வீட்டை திறந்து விட்டு அதில் 100 பேரை தங்க வைத்தார்.

100 பேர் ஆயிரம் பேரானது. அவர்களெல்லாம் தங்கள் வீட்டிற்கு போகும் போது வெறும் கையால் அனுப்பாமல் ஒவ்வொருத்தருக்கும் தலா பத்தாயிரத்தை கையில் கொடுத்து அனுப்பி வைத்திருக்கிறார். மற்ற நடிகர்கள் எல்லாம் முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதிக்கு செக்காக தான் வழங்கினார்கள்.

ஆனால் தல அஜித் ஆயிரம் மக்களை நேருக்கு நேராக சந்தித்து அவர்கள் கையில் மொத்தமாக ஒரு கோடியை கொடுத்து அவர்களுக்கு மறுவாழ்வு அளித்துள்ளார். இவ்வாறு வெள்ளித்திரை பிரபலங்கள் மட்டுமல்ல சின்னத்திரை பிரபலங்களான கேபிஒய் பாலா, அறந்தாங்கி நிஷா உள்ளிட்டோரும் தங்களால் முடிந்த உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைந்து வழங்கினார்கள்.

Also read: என்னது அஜித் கூட சேர்ந்து போட்டோ எடுத்தா வேலை போயிடுமா.? பேக் பண்ணி அனுப்பிய சம்பவம்

Trending News