புதன்கிழமை, ஜனவரி 8, 2025

2023 தீபாவளிக்கு மல்லுக்கெட்ட போகும் டாப் ஹீரோக்களின் 5 படங்கள்.. முட்டி மோதி யார் ஜெயிக்கிறான்னு பார்க்கலாம்

வருடம் தோறும் தீபாவளி பண்டிகை வந்தாலே எந்த படம் ரிலீஸ் ஆகிறது என்றே பலரும் எதிர்பார்ப்பார்கள். சில நேரங்களில் பெரிய ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி விடும். சில நேரங்களில் சின்ன ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ஆகி வெற்றியை தட்டி தூக்கி விடும். இந்த வருடம் தீபாவளிக்கு மிகப்பெரிய டாப் ஹீரோக்களின் படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன.

ஜெயிலர்: சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் ஜெயிலர். இந்த படத்தில் தென்னிந்திய சூப்பர் ஸ்டார்களான மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பான் இந்தியா மூவியாக இந்த படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

Also Read: விக்னேஷ் சிவனின் வாழ்க்கையை சல்லி சல்லியாய் நொறுக்கும் அஜித்.. ரெடியாக உள்ள அடுத்த ஆப்பு

இந்தியன் 2: இயக்குனர் சங்கர் மற்றும் உலக நாயகன் கமலஹாசன் கூட்டணியில் வெளியான இந்தியன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை சங்கரும் கமலஹாசனும் இணைந்து 2019 ஆம் ஆண்டு ஆரம்பித்தனர். ஒரு சில காரணங்களால் பட வேலைகள் பாதியிலே நின்றுவிட மீண்டும் கடந்த வருடம் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டது. தற்போது இந்த படம் தீபாவளி ரிலீசுக்காக காத்திருக்கிறது.

ஏ கே 62: நடிகர் அஜித் துணிவு திரைப்படத்திற்கு பிறகு தன்னுடைய 62 வது பட வேலைகளில் மும்முரமாக இறங்கி இருக்கிறார். முதலில் இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டார். இன்று வரை இந்த படத்திற்கு இயக்குனர் முடிவாகவில்லை என்றாலும் அஜித்தின் 62 ஆவது படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய லைக்கா நிறுவனம் திட்டவட்டமாக முடிவெடுத்திருக்கிறது.

Also Read: ரஜினி பெயரை கெடுக்க வந்த வாரிசு.. தெரியாமல் மாட்டிக் கொண்ட சூப்பர் ஸ்டார்

சூர்யா 42: சூரரைப் போற்று, ஜெய் பீம் திரைப்படத்தின் வெற்றிகளுக்குப் பிறகு சூர்யா ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் என்றால் அது அவருடைய 42வது திரைப்படம் தான். ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு பிறகு சூர்யா மீண்டும் இந்த படத்தில் வரலாற்று கதையில் நடிக்கிறார். மேலும் சூர்யா 42 படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்குகிறார். இந்த படத்தில் பாலிவுட் ஹீரோயின் திஷா பட்டாணியும் இணைந்து இருக்கிறார்.

மாவீரன்: பிரின்ஸ் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் மாவீரன். இந்த படத்தை மண்டேலா திரைப்படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் தான் இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் ஹீரோயினாக நடித்து கொண்டிருக்கிறார்.

Also Read: கமலின் வெற்றி பார்முலாவை கையில் எடுக்கும் ரஜினி.. ரோலக்ஸ் செய்யப் போகும் சம்பவம்

Trending News