வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பாக்ஸ் ஆபிஸை முதல் நாளிலேயே மிரட்டிய 3 படங்கள்.. டாப் லிஸ்டில் இருக்கும் துணிவு

2023ல் வெளியான படங்களில் தமிழகத்தில் பாக்ஸ் ஆபீசை முதல் நாளிலேயே மிரட்டிவிட்ட டாப் 3 படங்களின் லிஸ்ட் தற்போது இணையத்தில் வெளியாகி கலக்கிக் கொண்டிருக்கிறது. அதிலும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியான அஜித்தின் துணிவு படம் லிஸ்டில் டாப் இடத்தை பிடித்திருக்கிறது.

பொன்னியின் செல்வன்: மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வெளியாகி தாறுமாறான வசூலை குவித்தது. அதன் இரண்டாம் பாகம் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று இருக்கிறது.

அதிலும் ரிலீசான முதல் நாளிலேயே தமிழகத்தில் மட்டும் 21 கோடியை வாரி குவித்திருக்கிறது. இது நல்ல ஓபனிங் என்றாலும் அடுத்தடுத்த நாட்களில் வசூல் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே பொன்னியின் செல்வன் தமிழகத்தில் முதல் நாளில் அதிக வசூலி ஈட்டிய படங்களின் லிஸ்டில் 3-வது இடத்தை பிடித்திருக்கிறது.

Also Read: நாவலையும், திரைக்கதையையும் பார்த்து குழம்பும் ஆடியன்ஸ்.. லாஜிக்கை விளக்கி கூறிய மணிரத்தினம்

வாரிசு: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தளபதி விஜய்யின் வாரிசு திரைப்படம் இந்த வருட தொடக்கத்தில் வெளியானது. பக்கா குடும்ப செண்டிமெண்ட் படமான இந்த படத்தில் விஜய்யின் வித்தியாசமான நடிப்பை பார்க்க முடிந்தது. தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் முதல் நாளில் மட்டும் 22 கோடியை வாரிக் குவித்து, தமிழகத்தில் முதல் நாளிலேயே அதிக வசூலை ஈட்டிய 2-வது இடத்தைப் பிடித்த பெருமையை பெற்றது.

Also Read: 300 பேரை அழைத்து பாராட்டிய தளபதி.. அரசியல் ஆட்டம் ஆரம்பம், 2026ல் தட்டித் தூக்க பலே திட்டம்

துணிவு: தமிழகத்தின் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக பார்க்கப்படும் அஜித்தின் துணிவு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த வருட தொடக்கத்தில் வெளியானது. பக்கா ஆக்சன் படமாக வெளியான இந்த படம் வாரிசு உடன் திரையரங்கில் போட்டி போட்டு வசூலை வாரிக் குவித்தது. முதல் நாளில் மட்டும் துணிவு படத்திற்கு 25 கோடி கலெக்ஷன் ஆனதும் குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழகத்தில் முதல் நாளில் அதிக வசூலை ஈட்டிய படங்களின் லிஸ்டில் டாப் இடத்தை பிடித்திருக்கிறது.

இவ்வாறு கோலிவுட்டில் இந்த வருடம் வெளியான படங்களில் தமிழகத்தில் மட்டும் முதல் நாளில் அதிக வசூலை துணிவு, வாரிசு, பொன்னியின் செல்வன் போன்ற 3 படங்களும் வசூலித்து பாக்ஸ் ஆபிஸை மிரட்டியது.

Also Read: உடல் நலக்குறைவால் மரணமடைந்த அஜித்தின் நண்பர்.. அதிர்ச்சியில் திரையுலகம்

Trending News