வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

2024 வெற்றி பெற தவிக்கும் படங்கள்.. மூளையை கழட்டி வீட்ல வச்சுட்டு போய்பாருங்க விளாசிய ப்ளூ சட்டை மாறன்

2024 Flop movies in tamil cinema: இன்றைய நடைமுறையில்  திரைக்கு வரும் படங்களில் நல்ல கதை  இல்லாவிட்டாலும் கதையாவது இருக்கா என்று தேடிப் பார்க்கும் படியான திரைப்படங்களை வெளிவருகிறது. வசூலை மட்டுமே நோக்கமாகக் கொண்டு  மக்களுக்கு இது பிடிக்கும் என்று திணித்து எப்படி எடுத்தாலும் பரவாயில்லை என வரும் இயக்குனர்களின் நோக்கம் சில சமயம் தரைமட்டம் ஆகி விடுவது தான் உண்மை.

இந்த வருடம் தொடங்கி ஒன்றரை மாதங்கள் கடந்துள்ள நிலையில் கிட்டதட்ட 11 படங்கள் வெளிவந்து சில வசூல் ரீதியான வெற்றியடைந்தாலும் விமர்சன ரீதியாக தோல்வியவே தழுவியது. நல்ல கதை என விமர்சன ரீதியாக வென்றிருந்த சில படங்கள் வசூலில் தன்னிறைவை பெற முடியாது தவித்தன.

முன்னணி நடிகர்கள் அதிக காலம், அதிக பொருட்செலவு, பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள்  என பிம்பத்துடன் வெளிவந்த அயலான் மற்றும் கேப்டன் மில்லர் திரைப்படங்கள் வசூலில் வெற்றி பெற்றிருந்தாலும் விமர்சன ரீதியாக சற்றே அடி வாங்கியது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் சேதுபதி, கத்ரினா கைப்பின் மேரி கிறிஸ்மஸ் படமோ மொத்தமாக தோல்வியை தழுவி ரசிகர்களை ஏமாற்றியது.

Also read: பத்திரமாக அலமாரியில் வைத்து அழகு பார்க்கப்படும் 5 படங்கள்.. எதற்கும் வளைந்து கொடுக்காத கௌதம் மேனன்

கதையில் குறை வைத்து நிறைய கூற முடியாத அளவு வெளிவந்த மறக்குமா நெஞ்சம்,டெவில், சிக்லெட்ஸ், சிங்கப்பூர் சலூன் போன்ற படங்கள் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற முடியாமல் கதை ரீதியாகவும் மக்களின் மனதை நிலைக்க முடியாமல் தடுமாறி போயின.

சந்தானம், நிழல்கள் ரவி மற்றும் லொள்ளு சபா கூட்டணியில் வெளிவந்தது வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம். சிரிப்புக்கு குறை வைக்காது அனைவருக்கும் இடம் கொடுத்து வெளுத்து வாங்கி இருந்தார் வடக்குப்பட்டி ராமசாமி. இரண்டாம் பாதியை ஆகா ஓகோ எனப் புகழ்ந்தவர், முதல் பாதியை மூளையை கழட்டி வைத்து விட்டு போய் பாருங்க என்று பிரித்து மேய்ந்து இருந்தார் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன்.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே தலைவரின் சிறப்பு தோற்றத்தில்  வெளிவந்த லால் சலாமோ  பழைய படத்தை அப்படியே திருப்பி போட்டது போல் இருக்க ரசிகர்கள் மனதை வெல்லாது வசூல் வேட்டையிலும் கோடியில் ஆரம்பித்து லட்சங்களுடன் ஜகா வாங்கி போனது

Also read: சந்தானம் விட்டுக் கொடுக்காத அந்த 5 காமெடியன்கள்.. முரட்டு வில்லனையும் மொக்க பண்ணும் கெட்ட பைய காளி

Trending News