2024 Celebrity Marriage And Divorce: இந்த வருடம் திரையுலகில் ஏகப்பட்ட சம்பவங்கள் நடந்திருக்கிறது. அதில் திருமணமும் உண்டு விவாகரத்தும் உண்டு. அதை பற்றி இங்கு காண்போம்.
அதன்படி இந்த வருடம் பல பிரபலங்கள் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். அதில் அர்ஜுன் தன் மகள் ஐஸ்வர்யாவின் திருமணத்தை கோலாகலமாக நடத்தினார்.
நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியை விரும்பிய ஐஸ்வர்யா தற்போது அவர்கள் வீட்டு மருமகளாகியுள்ளார். அதை அடுத்து சித்தார்த் அதிதி ராவ் இருவரும் நீண்டகாலமாக காதலித்து வந்தனர்.
அந்த காதல் இந்த வருடம் திருமணத்தில் முடிந்திருக்கிறது. மேலும் சரத்குமாரின் மகள் வரலட்சுமி தொழிலதிபர் நிக்கோலாய் திருமணமும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
அதேபோல் 45 வயதை நெருங்கிய பிரேம்ஜி இந்த வருடம் குடும்பஸ்தனாக மாறினார். இந்து என்பவருடன் இவருக்கு சிம்பிளாக திருமணம் நடந்து முடிந்தது.
அடுத்ததாக குட் நைட் படம் மூலம் கவனம் பெற்ற மீதா ரகுநாத் இந்த வருடம் திருமதியாக மாறியுள்ளார். அதேபோல் மேகா ஆகாஷ் சாய் விஷ்ணு திருமணம் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது.
மேலும் ரம்யா பாண்டியன் தன் காதலரை நவம்பர் மாதம் கரம் பிடித்தார். அதே போல் சில தினங்களுக்கு முன்பு ஜெயராம் மகன் காளிதாஸ் ஜெயராம் தன் காதலியை திருமணம் செய்து கொண்டார்.
2024-ன் திருமணங்களும் விவாகரத்து சம்பவமும்
அது மட்டும் இன்றி சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைத்தன்யா சோபிதாவை சமீபத்தில் கரம் பிடித்தார். இப்படி பல ஜோடிகள் இந்த வருடம் திருமணத்தில் இணைந்துள்ளனர்.
அதில் நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய நீண்ட நாள் காதலர் ஆண்டனியை நாளை திருமணம் செய்ய இருக்கிறார். இதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
இது ஒரு பக்கம் இருக்க இந்த வருடம் ஜிவி பிரகாஷ் தன் மனைவி சைந்தவியை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இது கடும் அதிர்வலையை கிளப்பியது.
அது நடந்து குறுகிய காலத்திலேயே ஜெயம் ரவி தன்னுடைய விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பூதாகரமாக பல பிரச்சினைகள் பிடித்தது.
இதை ஏற்க முடியாமல் இருந்த ரசிகர்களுக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்தார் ஏ ஆர் ரகுமான். அவர் தன்னுடைய மனைவி சாய்ரா பானுவை பிரிவதாக அறிவித்ததும் சர்ச்சையானது.
இது எல்லாவற்றுக்கும் மேலாக தனுஷ் ஐஸ்வர்யா பிரிந்து இருந்தாலும் சேர்ந்து விடுவார்கள் என ரசிகர்கள் நம்பினார்கள். ஆனால் அதை பொய்யாக்கும் வகையில் சட்டப்படியாக அவர்கள் பிரிந்தனர்.
இப்படியாக இந்த வருடம் திரையுலகில் பல சம்பவங்கள் நடந்தது. அதில் ஏ ஆர் ரகுமான் விவாகரத்து தான் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.