திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

பொங்கல் விடுமுறைக்கு ரிலீஸ் ஆகும் 8 படங்கள்.. கேப்டன் மில்லருக்கு கட்டம் கட்டிய மகேஷ் பாபு

2024 Pongal and sankranti released movies: பொங்கல் விடுமுறையை கணக்கில் கொண்டு வசூலை அள்ளும் நோக்கோடு முன்னணி நடிகர்களின் படங்கள் நேரடியாக மோத உள்ளது. கமலின் இந்தியன் 2, சூர்யாவின் கங்குவா, ரஜினியின் லால் சலாம் ஆகியவற்றை எதிர்பார்த்த நிலையில் அவற்றின் ரிலீஸ் தேதி தள்ளிப் போய் உள்ளது.  இந்த ஆண்டு பொங்கல் ரிலீஸ் ஆக வெளிவரும் படங்களின் லிஸ்ட் இதோ,

அயலான்: 100 கோடி பட்ஜெட்டில் தயாராகி உள்ள இந்த அயலான், பட்ஜெட் மற்றும் கொரோனா போன்ற பல்வேறு எதிர்ப்புகளை மீறி இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவர உள்ளது. ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கும் அயலான் வித்தியாசமான கதை அம்சம் கொண்ட ஏலியன் ஜனரில் வெளிவரும் முதல் தமிழ் படம் ஆகும்.

குண்டூர் காரம்: மகேஷ்பாபுவின் உயிருக்கு மேலான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் திரைப்படம் குண்டூர் காரம். திரி விக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு உடன் ஸ்ரீலீலா, மீனாட்சி சவுத்ரி, ஜெகபதிபாபு உள்ளிட்டோர் நடித்து ஆந்திராவின் சங்கராந்தி ஸ்பெஷலை முன்னிட்டு ஜனவரி 12 அன்று ஆந்திராவின் பெரும்பான்மையான தியேட்டர் உரிமையை கைப்பற்றி  அதிரடி காட்ட வருகிறது குண்டூர் காரம்.

Also read: கேப்டன் மில்லர் விழாவில் தனுஷ் மானத்தை வாங்கிய ரசிகர்.. கூட்டத்தில் மன்னிப்பு கேட்க வைத்த தொகுப்பாளினி

கேப்டன் மில்லர்: சாணிகாயிதம் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் டைம் பீரியட் படம் கேப்டன் மில்லர். தெலுங்கில் மகேஷ்பாபுவின் குண்டூர் காரம் வெளியாவதால் வாத்தி படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களை உற்சாகப்படுத்திய தனுஷிற்கு, ஆந்திராவில் இப்படத்தை திரையிட தியேட்டர் உரிமை கிடைக்காமல் அல்லாடி வருகிறார்.

சைந்தவ்: வெங்கடேஷ் நடிப்பில் உருவாகியுள்ள சைந்தவ் பான் இந்தியா மூவியாக ரெடி ஆகி உள்ளது. சங்கராந்தி ஸ்பெஷலை முன்னிட்டு ஜனவரி 13 அன்று ரிலீஸ் ஆக உள்ளது  சைந்தவ். நோயுற்ற மகளை காக்கும் தந்தையாக களமிறங்குகிறார் வெங்கடேஷ்

ஹனுமான்: பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா, அமிர்தா ஐயர், சமுத்திரகனி  மற்றும் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் ஹனுமான். ஆந்திராவில் சங்கராந்தி முன்னிட்டு ஜனவரி 12 ரிலீஸ் ஆகிறது.

மேரி கிறிஸ்மஸ்: மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கோலிவுட்டை தாண்டி பாலிவுட்டிலும் தடம் பதித்து வெற்றி கொடி நாட்டி வரும் வேளையில் தற்போது பாலிவுட்டின் கனவு கன்னி கத்ரீனா கைப்புடன் மேரி கிறிஸ்மஸில் இணைந்துள்ளார்.  இப்படம் தமிழ் மற்றும் ஹிந்தி பதிப்பாக பொங்கலில் ரிலீஸ் ஆகிறது.

நான் சாமி ரங்கா: ஆஸ்கார் வின்னிங் இசையமைப்பாளர் கீரவாணியின் இசையில் நாகார்ஜுனா அதிரடி ஆக்ஷனில் களமிறங்கும் படம் நான் சாமி ரங்கா. நாகார்ஜுனாவின் பிறந்தநாள் அன்று படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது சங்கராந்தி ஸ்பெஷலாக ஜனவரி 14 அன்று ரிலீஸ் ஆகிறது .

மிஷன் சாப்டர் ஒன்:  அச்சம் என்பது இல்லையே என்று துணிச்சலுடன் வரும் அருண் விஜய்யின் மிஷன் சாப்டர்1 இன் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. தன் அன்பு மகளை காப்பாற்ற புதிய வியூகங்களுடன் களம் இறங்குகிறார் அருண் விஜய்.

Also read: அயலான் படத்திற்கு சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம்.. அதிக லாபத்திற்கு போட்ட ஸ்கெட்ச்

Trending News