வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

பொங்கல் ரேசில் பாய் விரித்து படுத்த 4 படங்கள்.. தனுஷை எச்சரிக்கும் அக்கட தேச நடிகர்கள்

2024 Pongal release movies: புத்தாண்டு களை கட்டியதை அடுத்து பொங்கலுக்கான கொண்டாட்டங்கள் தலை தூக்கி உள்ளன. ரசிகர்கள் பொங்கலை கொண்டாடும் கையோடு தங்கள் தலைவனின் படங்களை கொண்டாட தவறுவதில்லை. ஜனவரி 12 அன்று பொங்கலுக்கு ரிலீசாக காத்திருக்கும் படங்கள் இதோ,

மிஷன் சாப்டர் ஒன்: அருண் விஜய், எமி ஜாக்சன் நடிக்கும் “மிஷன் சாப்டர் ஒன் அச்சம் என்பது இல்லையே” படத்தையும்,  ரஜினி கௌரவ வேடத்தில் தோன்றி ஐஸ்வர்யா இயக்கிய லால் சலாம்  படத்தையும் லைக்கா நிறுவனமே தயாரிக்கின்றது. அருண் விஜய்யின் மிஷன் படத்தை பொங்கலுக்கு  ரிலீஸ் செய்து விட்டு லால் சலாம் ரிலீஸை பின்னுக்கு தள்ளியுள்ளது லைக்கா.

அயலான்: தொடர்ந்து பல வருடங்களாக தாமதப்படுத்தப்பட்ட அயலான் இந்த பொங்கலுக்கு கண்டிப்பாக ரிலீசாக ஆகிறது. ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்  ரகுல்பிரீத்தி சிங் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் அவர்கள் குழந்தைகளுக்கு பிடித்தமான குடும்ப பாங்கான படமாக அயலான் இருக்கும். பொங்கலுக்கு கண்டிப்பாக அயலான் வருவான்! கவர்வான் என்று பல எக்ஸ்ட்ரா பிட்டுகளை போட்டு உள்ளார் சிவகார்த்திகேயன்.

Also Read: 2024 இல் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் 6 படங்கள்.. இந்தியன் 2வுக்கு டப் கொடுக்க வரும் கல்கி

கேப்டன் மில்லர்: அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ் குமார் நடித்த டைம் பிரியட் படமான கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாக உறுதியாகியுள்ளது. தெலுங்கில் மகேஷ்பாபு, ரவி தேஜா, நாகார்ஜுனா போன்ற முன்னணி நடிகர்களின் ஆறு படங்கள் ரிலீஸ் ஆவதை ஒட்டி கேப்டன் மில்லர் ஆந்திராவில் ரிலீஸ் ஆவது கேள்விக்குறியாகி உள்ளது. பொங்கல் கழிந்த சில வாரங்களுக்கு பின் ஆந்திராவில் ரசிகர்கள் கேப்டன் மில்லரை எதிர்பார்க்கலாம்.

மேரி கிறிஸ்மஸ்: ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் தமிழ் ரசிகர்களின் கனவுகன்னி பாலிவுட் ஸ்டார் கேத்ரினா கைஃப்  இணைந்து நடித்த மேரி கிறிஸ்மஸ் படம் கிறிஸ்மஸ்க்கு வெளிவர இருந்த நிலையில் தாமதமாகி பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. ஜவான் மூலம் பாலிவுட்டை தெறிக்க விட்ட விஜய் சேதுபதி இப்படத்தின் தமிழ், ஹிந்தி இரு மொழிகளிலும் டப்பிங் பேசியுள்ளார்.

பொங்கல் ரேசில் தனுஷ், சிவகார்த்திகேயன், அருண் விஜய் மற்றும் விஜய் சேதுபதி படங்கள்  ரிலீஸ் ஆவதை ஒட்டி இந்த வருட பொங்கல் வெறித்தனமாக இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை.

Also Read: 2024-ல் 1000 கோடி உறுதியா அடிக்க காத்திருக்கும் 5 படங்கள்.. ஜெயிலருக்கு டஃப் கொடுக்க வரும் ரெண்டு ஹீரோஸ்

Trending News