ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

கூட நிக்க முடியாமல் திணறும் ரெண்டு படம்.. தனுஷை மிஞ்சி சிவகார்த்திகேயன் போடும் ஆட்டம்

2024 pongal release tamil films and sivakarthikeyan ayalaan keeps maximum theatre rights: ஜனவரி 12 பொங்கல் விடுமுறையை முன்னிட்டு நடிகர்களின் 4 படங்கள் தமிழ் திரையை அலங்கரிக்க வருகின்றன. ரிலீஸை நெருங்கியுள்ள நிலையில் திரையரங்கு உரிமையை வாங்குவதில் படங்களுக்கு இடையே போட்டா போட்டி நிகழ்கிறது. அதில் இரண்டு படங்கள் தியேட்டர் உரிமை இல்லாமல் தள்ளாடி வருகிறது.

அயலான்: தமிழ் திரையில் யாரும் நெருங்காத ஏலியன் ஜனரை துணிச்சலுடன் கையில் எடுத்த ரவிக்குமாரின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் படத்தின் தியேட்டர் உரிமம்  வெளிநாடு மற்றும் தமிழ்நாடு இரண்டையும் சேர்த்து 51 கோடிக்கும் மேல். உலகஅளவில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் முதல் திரைப்படம் அயலான்.

கேப்டன் மில்லர்: தனுஷ் ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜனவரி 12 வெளிவரும் கேப்டன் மில்லரின் தமிழக உரிமம் 25 கோடி முதல் 30 கோடி வரை உள்ளது. ஜெயிலருக்கு இணையாக அதிக திரையரங்குகளை பெரும் நோக்குடன் மும்முரமாக இறங்கியுள்ளார் கேப்டன் மில்லர். படத்தின் வெளிநாட்டு உரிமையை லைக்கா நிறுவனம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also read: பொங்கலுக்கு ரிலீஸ் ஆக போராடும் 4 படங்கள்… ஸ்டைலா கெத்தா லால் சலாம் உடன் போட்டி போடும் கேப்டன் மில்லர்

மிஷன் சாப்டர் ஒன்: லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் ரெடியாகி உள்ள அருண் விஜய்யின் மிஷன் சாப்டர் ஒன்றுக்காக மற்றொரு படைப்பான லால் சலாமின் ரிலீஸை தள்ளி வைத்தது. ஆனபோதும் மிசன் சாப்டர் ஒன் படத்திற்கு திரையரங்கு உரிமை  இல்லாதது லைக்கா நிறுவனத்தை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

மேரி கிறிஸ்மஸ்: மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் கேத்ரினா கைஃப் ஆகியோர் இணைந்து நடித்த மேரி கிறிஸ்மஸ் தமிழ் மற்றும் இந்தி பதிப்புகளில் இந்த பொங்கலுக்கு வெளியாக உள்ளது. அயலான் மற்றும் கேப்டன் மில்லர் அதிகளவு திரையரங்குகளை கைப்பற்றியுள்ளதால் விஜய் சேதுபதியின் மேரி கிறிஸ்மஸ் படக்குழு திரையரங்கு கிடைக்காமல் அதிர்ச்சியில் உள்ளார்கள்.

பல ஆண்டுகள் காத்திருந்த நிலையில் தயாராகி உள்ள அயலான் வெற்றி பெற்றால் மட்டுமே சம்பளம் என ஸ்கெட்ச் போடும் சிவகார்த்திகேயன் பெரும்பான்மையான தியேட்டர் உரிமையை கைப்பற்றி கேப்டன் மில்லரை பின்னுக்கு தள்ளி உள்ளார். குறிப்பாக அருண் விஜய்யின் மிஷன் சாப்டர் ஒன்,விஜய் சேதுபதியின் மேரி கிறிஸ்மஸ் வெளிவர முடியாதபடி திணறுவதற்கு அயலான் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

Also read: அயலான் படத்திற்கு சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம்.. அதிக லாபத்திற்கு போட்ட ஸ்கெட்ச்

Trending News