ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

பொங்கலுக்கு ரிலீஸ் ஆக போராடும் 4 படங்கள்… ஸ்டைலா கெத்தா லால் சலாம் உடன் போட்டி போடும் கேப்டன் மில்லர்

2024 Pongal release tamil movies: பொங்கலோ பொங்கல் என பொங்கலை கொண்டாடின கையோடு தங்களது தலைவர்களின் படத்தை காண வேண்டுமென்பதை வழக்கமாக வைத்துள்ளனர் ரசிகர்கள். வியாபார நோக்கில் படத்தின் வசூல் பன்மடங்கு அதிகமாகும் என்பதை குறி வைத்தே சில படங்கள் பொங்கலில் ரிலீஸ் ஆக உள்ளது.

இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் முன்னணி ஹீரோக்களின் நாலு படங்கள் 2024 பொங்கல் ரிலீஸ் காக படப்பிடிப்பை முடித்து ப்ரொடக்ஷன் வொர்க்கில் பிஸியாகி உள்ளது. போட்டி அதிகமாகும் பட்சத்தில் படங்கள் பின்வாங்கவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லால் சலாம்: நீண்ட இடைவெளிக்குப் பின் ஐஸ்வர்யா இயக்கத்தில் “லால் சலாம்”
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் வந்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினி மும்பை டான் ஆக கௌரவ தோற்றத்தில்  நடிக்கிறார். விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோரின் நடிப்பில் கிரிக்கெட் அரசியலை முன்வைத்து தயாராகி உள்ளது லால் சலாம்.

Also Read: சூப்பர் ஸ்டார் பட்டத்தோடு ரஜினி தலையெடுத்த படம்.. 90களில் பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆன தலைவர்

அயலான்:  ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பல வருடங்களாக பல போராட்டங்களுக்கு பின் பிரம்மாண்ட செலவில் தயாராகியுள்ள அயலான், ரிலீசாக பல நீதிமன்ற பிரச்சனைகளையும் கடந்து உள்ளது. ரிலீசுக்கு இன்னும் பத்து கோடி தேவை என்ற நிலையில் எந்த சோதனை வந்தாலும் கண்டிப்பாக பொங்கலுக்கு அயலான் ரிலீஸ் ஆகும் என்று உறுதி கூறியுள்ளனர் படக்குழுவினர்.

கேப்டன் மில்லர்: தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள ஆக்சன் திரில்லர் திரைப்படம் கேப்டன் மில்லர். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுசு உடன் பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். மூன்று பாகங்களாக உருவாக இருக்கும் கேப்டன் மில்லரில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பொங்கலுக்கு  ரிலீஸ் ஆக இருக்கும் ரஜினியின் கௌரவ தோற்றத்தில் தயாராகும் லால் சலாம் உடன் ஸ்டைலா கெத்தா போட்டியிட வருகிறார் கேப்டன் மில்லர்

தங்கலான்: பா ரஞ்சித்தின் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் தங்கலான் ஏற்கனவே படப்பிடிப்பு முடித்திருந்தாலும் விக்ரமின் சில காட்சிகள் இயக்குனரின் மனதில் ஒட்டாமல் போகவே மீண்டும் வேக வேகமாக ரீசூட் செய்து வருகின்றனர். பொங்கலுக்கு ரிலீஸ் ஆக படத்தின் வேலைகள் துரிதமாக்கப்பட்டு இருக்கின்றன முடியாத பட்சத்தில் தங்கலான் ரிலீஸ் குடியரசு தினத்திற்கு தள்ளி போக வாய்ப்பு உள்ளது.

Also Read: 20 வருடங்களுக்குப் பின் விக்ரம் செய்யும் அதே கதாபாத்திரம்.. தங்கலான் படத்தின் உண்மையை உளறிய சியான்

Trending News